28 வயது முதலாளி மனைவியுடன் 25வயது இளைஞர் உல்லாசம் - துரோகத்தால் பகீர் சம்பவம்!

Attempted Murder Crime Death Virudhunagar
By Sumathi Jan 29, 2025 11:00 AM GMT
Report

திருமணத்தை மீறிய உறவால் ஏற்பட்ட மோதலில் கொலை செய்த இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.

தகாத உறவு

விருதுநகர், ராஜபாளையம் ஓடைப்பட்டி தெருவை சேர்ந்தவர் ராம்குமார்(33). இவருக்கு சந்தனமாரி(28) என்ற மனைவியும், இரு குழந்தைகளும் உள்ளனர். இவர் பால் பண்ணை வைத்து வியாபாரம் செய்து வந்துள்ளார்.

கொலை செய்த காளிராஜ்

அதில் வேலைக்காக சகோதரர் முறை கொண்ட காளிராஜ்(25) என்ற இளைஞரை வேலைக்கு சேர்த்துள்ளார். இந்நிலையில் காளிராஜ்க்கும், ராம்குமாரின் மனைவி சந்தனமாரிக்கும் தகாத உறவு ஏற்பட்டுள்ளது.

தொடர்ந்து கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் சந்தனமாரி தனது கணவர் மற்றும் இரு குழந்தைகளை விட்டு விட்டு ராம்குமாருடன் சென்றுள்ளார். இருவரும் வெளியூரில் கணவன்-மனைவியாக வாழ்ந்த நிலையில் அவர்களுக்கும் ஒரு குழந்தை பிறந்துள்ளது.

பிரபல ஸ்டார் ஹோட்டல் ஸ்பாவில் பகிரங்கமாக பாலியல் தொழில் - சிக்கிய பெண்கள்!

பிரபல ஸ்டார் ஹோட்டல் ஸ்பாவில் பகிரங்கமாக பாலியல் தொழில் - சிக்கிய பெண்கள்!

துரோகத்தால் கொடூரம்

இந்நிலையில், இருவரும் குழந்தையுடன் மீண்டும் ராஜபாளையத்திற்கே திரும்பி வந்துள்ளனர். இதனை அறிந்த ராம்குமார் பிரிந்து சென்றது குறித்து கேட்பதற்காக காளிராஜின் வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

ராம்குமார்

இதில் ஆத்திரமடைந்த காளிராஜ், வீட்டில் இருந்த அரிவாளை எடுத்து, ராம்குமாரின் கழுத்து, தலை என சரமாரியாக வெட்டியதில், அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துவிட்டார். உடனே சம்பவம் குறித்து அறிந்து விரைந்த போலீஸார் தலைமறைவான காளிராஜை கைது செய்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.