உடலுறவுக்கு மறுத்த மனைவி - கொன்று புதைத்து கணவன் வெறிச்செயல்!
மனைவி உடலுறவுக்கு மறுத்ததால் அவரது கணவன் அவரை கொன்று புதைத்துவிட்டு நாடகமாடியுள்ளார்.
புகார்
பீகார், சீதாமர்ஹியை பூர்விகமாக கொண்டவர் பிரிதிவிராஜ். இவர், பெங்களூர் மடிவாலா மாருதி நகரில் வசித்து வருகிறார். கடந்த 15 ஆண்டுகளாக எலக்ட்ரானிக் பொருட்களை ஏற்றுமதி செய்யும் தொழிலை செய்து வருகிறார்.
இந்நிலையில், காவல்நிலையத்தில் புகார் ஒன்றை அளித்தார். அந்த புகாரில், “தனது மனைவி பெயர் ஜோதிகுமாரி. பீகாரில் உள்ள சீதாமர்ஹி கிராமத்தை பூர்வீகமாக கொண்டவர். எங்கள் இருவருக்கும் கடந்த 9 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.
ஏமாற்றிய கணவன்
கடந்த நான்கு மாதங்களாக பெங்களூரில் வசித்து வருகிறோம். கடந்த 3-ந் தேதி முதல் தனது மனைவியை காணவில்லை” என்றும், கண்டுபிடித்து தருமாறும் கூறியிருந்தார். இதுகுறித்த காவல்துறையின் விசாரணையில், பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்தது.
பிரிதிவிராஜ், தனக்கு 28 வயது என்று கூறி ஜோதிகுமாரி என்பவரை திருமணம் செய்துள்ளார். ஆனால் கணவருக்கு 38வயது என்பதை ஒருக்கட்டத்தில் ஜோதிகுமாரி கண்டுபிடித்துள்ளார். இதனால் இருவருக்குமிடையே அடிக்கடி தகராறு வந்துள்ளது.
உடலுறவுக்கு மறுப்பு
அதனையடுத்து அச்சம்பவத்தை மனைவி மன்னித்துள்ளார். அதனைத் தொடர்ந்து, ஜோதிகுமாரி கணவருடனான உடலுறவுக்கு மறுப்பு தெரிவித்துள்ளார். மேலும் செல்போனில் அதிகமாக பேசிக்கொண்டு இருந்துள்ளார்.
இதனால் சந்தேகித்த கணவன் வேறொரு நபருடன் தொடர்பில் இருப்பதால்தான் மனைவி இவ்வாறு நடந்துக் கொள்வதாக எண்னியுள்ளார். இதனால், ஆத்திரமடைந்த கணவன், மனைவியை கொலை செய்ய முடிவு செய்து நண்பர் சமீர்குமாரின் உதவியை நாடியுள்ளார்.
கொன்று புதைப்பு
அதனையடுத்து, மூவரும் உடுப்பியில் உள்ள மால்பேவிற்கு சென்றுள்ளனர். காரில் பெங்களூர் திரும்பிக்கொண்டிருந்த போது, கணவரும், நண்பரான சமீர்குமாரும் துப்பட்டாவால் மனைவியின் கழுத்த நெறித்துள்ளனர்.
இதனால் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த மனைவியை காட்டிற்குள் புதைத்துள்ளனர். அதன்பின் தான், இது எதுவும் நடக்காதது போல், போலீசில் புகார் அளித்துள்ளார். இந்த விசாரணையின் அடிப்படையில், பிரிதிவிராஜை கைது செய்து, அவரது மனைவியின் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பியுள்ளனர்.