பணத்திற்காக மனைவிகளை உடலுறவுக்கு மாற்றிக்கொள்ளும் விழா - கேரளாவை அதிர வைத்த சம்பவம்

kerala CoupleSharinggroup
By Petchi Avudaiappan Jan 11, 2022 08:03 PM GMT
Petchi Avudaiappan

Petchi Avudaiappan

in இந்தியா
Report

கேரளாவில்  பணத்திற்காக மனைவிகளை உடலுறவுக்கு மாற்றிக்கொள்ளும் சம்பவம் நடைபெறுவதாக வெளியான தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

கோட்டயம் மாவட்டம் சங்கனாச்சேரியை சேர்ந்த பெண் ஒருவர் சில நாட்களுக்கு முன்பு போலீசில் புகார் ஒன்றை அளித்துள்ளார். அதில் தம்பதிகளை பகிர்ந்து கொள்ளும் குரூப் என்ற ஒரு குழு டெலிகிராம் ஆப்பில் இயங்கி வருவதாகவும், அதில் தனது கணவரும் உறுப்பினராக உள்ளதாகவும் தெரிவித்திருந்தார். தனது கணவர் மற்ற ஆண்களுடன் வலுக்கட்டாயமாக உடலுறவு வைத்துக்கொள்ள வற்புறுத்தியதாக கூறியிருந்தார்.

இதன் அடிப்படையில் விசாரணை நடத்திய போலீசார் புகார் அளித்த பெண்ணின் கணவர் உள்பட 7 பேரை கைது செய்தனர். அவர்களிடம் விசாரித்தபோது பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. டெலிகிராம் ஆப்பில் 'தம்பதிகளை பகிர்ந்து கொள்ளும்' (Couple Sharing )குழு செயல்பட்டு வருகிறது. இதில் சுமார் 1000க்கும் அதிகமான தம்பதிகள் உறுப்பினர்களாக உள்ளனர். அவர்களில் ஆண்கள் தங்களது மனைவிகளை மற்ற ஆண்களுடன் பரிமாறிக் கொண்டுள்ளனர். அவர்களும் மற்றவர்களின் மனைவிகளுடன் உடலுறவு வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக கைது செய்யப்பட்ட 7 பேர் 3 மாவட்டங்களை சேர்ந்தவர்கள். சம்பந்தப்பட்ட டெலிகிராம் குரூப்பில் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்தவர்கள் உறுப்பினர்களாக இருக்கின்றனர். அவர்களில் சிலர் உயர் அதிகாரிகள், தனியார் துறையில் முக்கிய பொறுப்பில் இருப்பவர்கள் என கூறப்படுகிறது. 

முதலில் டெலிகிராமில் தொடர்பை ஏற்படுத்திக் கொள்ளும் நபர்கள் பின்னர் 2, 3 தம்பதிகளாக ஒரு குறிப்பிட்ட இடத்தில் சந்திக்கின்றனர். அந்த நேரத்தில் கணவன், மனைவிகள் பரிமாற்றம் நடக்கிறது. சில நேரங்களில் ஒரு பெண்ணை 3 ஆண்கள் பகிர்ந்து கொண்ட சம்பவமும் விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த சம்பவங்களில் மனைவிகளை மற்ற ஆண்களுக்கு அளிக்கும் நபருக்கு பணம் கிடைக்கிறது. 

'ஸ்டட்ஸ்' என்று ரகசிய சொற்களால் அழைக்கப்படும் இந்தக் குழுவில் சேர ரூ.14,000 செலுத்த வேண்டும். போலியான ப்ரொபைல் மற்றும் பெயர்களில் உறுப்பினர்களை தொடர்பு கொள்ள போலி சுயவிவரப் பெயர்களைப் (Fake ID)பயன்படுத்துகின்றனர்.  

இதுதொடர்பாக மேலும் 25 நபர்களை கண்காணித்து வருகிறோம். இந்த குற்றச் செயல்களில் சம்பந்தப்பட்டவர்கள், வேறு ஏதேனும் குற்றச் செயல்களில் தொடர்புடையவர்களா என்ற கோணத்திலும் விசாரணை நடந்து வரும் நிலையில் இந்த சம்பவம் கேரளாவை அதிர வைத்துள்ளது.