பெண்ணை 50 துண்டுகளாக வெட்டிய இளைஞர் - உடலுடன் பாலியல் உறவுக்கொண்ட கொடூரம்!
இளைஞர் இளம்பெண்ணை 50 துண்டுகளாக வெட்டி கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
50 துண்டுகளாக..
ஜார்க்கண்ட், குந்தி மாவட்டத்தின் ஜோர்டாக் கிராமத்தை சேர்ந்தவர் நரேஷ் பெங்ரா(25). இவர் 2 ஆண்டுகளாக தமிழ்நாட்டில் ஒரு கசாப்பு கடையில் பணிபுரிந்து வந்துள்ளார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஜார்க்கண்ட் திரும்பினார்.
திருமணமான இவர் அப்பகுதியை சேர்ந்த 24 வயது இளம்பெண்ணுடன் தொடர்பில் இருந்துள்ளார். மேலும் தனக்கு திருமணமானதை மறைத்து அந்த பெணணுடன் பழகி வந்த நிலையில், அந்த பெண்ணுடன் தனியாக வசித்து வந்ததாகவும் கூறப்படுகிறது.
கடந்த 8ம் தேதி அந்த பெண், தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு வற்புறுத்தியதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த அவர் அந்த பெண்ணை தனது வீட்டருகே உள்ள காட்டுப்பகுதிக்கு அழைத்து சென்றுள்ளார். அங்கு வைத்து அந்த பெண்ணை துப்பட்டாவால் கழுத்தை நெரித்துள்ளார்.
இதில் மயங்கி விழுந்த அப்பெண்னை பாலியல் வன்கொடுமை செய்த நரேஷ் பெங்ங்ரா, அவரை கூர்மையான ஆயுதத்தால் தாக்கி கொலை செய்து உள்ளார். இதையடுத்து, அந்த பெண்ணின் உடலை 40 முதல் 50 துண்டுகளாக வெட்டி விட்டு காட்டில் விலங்குகளுக்கு வீசி சென்றுள்ளார்.
கொடூரம்
இந்த நிலையில், பெண்ணின் உடல் துண்டு துண்டாக கிடந்ததை நாய்கள் கடித்ததை பார்த்து அதிர்ச்சியடைந்த மக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர் அதன்ப்படி, அங்கு விரைந்து சென்று போலீசார் துண்டு துண்டாக கிடந்த உடலை சேகரித்து விசாரணை நடத்தினர்.
மேலும் சம்பவ இடத்தில் ஆதார் அட்டை உள்ளிட்ட பொருட்கள் அடங்கிய பை ஒன்று கிடந்தது. அதனை கைப்பற்றி போலீசார் நடத்திய விசாரணையில் அந்த பெண் அடையாளம் காணப்பட்டார். இதை தொடர்ந்து, கொலை செய்யப்பட்ட பெண்ணின் தாயாரை வரவழைத்து போலீசார் நடத்திய விசாரணையில்,
அந்த பெண் நரேஷ் பெங்ராவுடன் திருமணம் செய்யாமல் லிவ்-இன் உறவில் இருந்ததும், சம்பவத்தன்று நரேஷ் பெங்ராவுடன் குடித்தனம் நடத்த போவதாக கூறி சென்றதும் தெரியவந்து. இதன் பிறகு,
போலீசார் நரேஷ் பெங்ராவை கைது செய்து விசாரணை நடத்தினர். அப்போது அவர் குற்றத்தை ஒப்புக்கொண்டார். இந்த கொலை தொடர்பாக போலீசார் மேலும் தீவரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.