காதலியுடன் நெருக்கம்.. ஆத்திரத்தில் உறுப்பை வெட்டிய இளைஞர் - பகீர்!
காதலியுடன் நெருக்கம் காட்டிய நண்பனை கொன்று பிறப்புறுப்பை வெட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
காதல் தகராறு
மஹாராஷ்டிரா, பிவந்தி பகுதியைச் சேர்ந்தவர் அஸ்லாம் அன்சாரி. இவரும் ஷமீம் அன்சாரி என்ற நெருங்கிய நண்பர் ஒருவர் இருக்கிறார். இந்நிலையில், ஷமீம் காதலி மீது அஸ்லாமிற்கு காதல் ஏற்பட்டுள்ளது.
ஷமீமிற்கு 5 காதலிகள் இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் அவர் யரௌடனும் நேர்மையாக இருக்கவில்லை. இதனை அறிந்த அஸ்லாம், தான் காதலிக்கும் அந்த பெண்ணிற்கு அதாவது ஷமீமின் காதலிக்கு உண்மையாக இருக்குமாறு அறிவுறுத்தியுள்ளார்.
நண்பன் வெறிச்செயல்
இல்லையெனில் அந்த பெண்னை விட்டு விலகுமாறும் கூறியுள்ளார். ஆனால் எதனையும் கண்டுக்கொள்ளாத ஷமீம் அப்பெண்ணுடன் பழகி வந்துள்ளார். தொடர்ந்து, ஆத்திரமடந்த அஸ்லாம், ஷமீமை மிரட்டியுள்ளார்.
இதனையடுத்து, ஷமீமின் ஹோட்டலில் இருவரும் பார்ட்டி செய்துள்ளனர். அப்போது மீண்டும் காதலி தொடர்பாக தகராறு ஏற்பட்டுள்ளது. அதில் அஸ்லாம், ஷமீமை கண் மற்றும் உடற்பகுதிகளில் 9 முறை கத்தியால் குத்தியுள்ளார்.
மேலும் அவரது பிறப்புறுப்பையும் வெட்டிவிட்டு தப்பி ஓடியுள்ளார்.
அதன்பின் ஹோட்டல் ஊழியர் வந்து பார்த்ததில் அதிர்ச்சியடைந்து போலீஸாரிடம் புகாரளித்துள்ளனர். அதன் அடிப்படையில் போலீஸார் அஸ்லாம் தான் உடனிருந்தார் என்பதையறிந்து அவரை கைது செய்தனர்.