வற்புறுத்திய 19 வயது கர்ப்பிணி காதலி - ஆத்திரத்தில் காதலன் வெறிச்செயல்!
காதலனை வற்புறுத்திய 19 வயது கர்ப்பிணிப் பெண் கொடூர கொலை செய்யப்பட்டுள்ளார்.
காதலி கர்ப்பம்
டெல்லியைச் சேர்ந்த நபர் ஒருவர் சகோதரி காணாமல் போனதாக, காவல்துறையில் புகாரளித்துள்ளார். மேலும், சகோதரியுடன் நட்பில் இருக்கும் ஒரு நபர் மீது சந்தேகம் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
அதன் அடிப்படையில், அப்பெண்ணுடன் நட்பில் இருந்த டெல்லியை சேர்ந்த சஞ்சு என்கிற சலீம் மற்றும் பங்கஜ் ஆகியோரை கைது செய்து விசாரணையை தொடங்கினர். அதில், கர்ப்பமாக இருந்த அந்த 19 வயது பெண், தன்னை திருமணம் செய்துகொள்ளும்படி சஞ்சுவிடம் வற்புறுத்தியுள்ளார்.
காதலன் வெறிச்செயல்
ஆனால் இப்போது முடியாது என சஞ்சு மறுத்துள்ளார். உடனே அந்தப் பெண் சண்டையிட்டுள்ளார். இதனால், ஆத்திரமடைந்த சஞ்சு தனது நண்பர்களான பங்கஜ் மற்றும் ரித்திக் ஆகியோருடன் சேர்ந்து ஒரு காரை ஏற்பாடு செய்து காதலியை ஹரியானாவின் ரோஹ்தக் நோக்கி அழைத்துச் சென்றுள்ளார்.
அங்கு மதீனாவில் உள்ள ஒரு பகுதியில் அவர்கள் அந்தப் பெண்ணைக் கொன்று, நான்கு அடி ஆழமான குழி தோண்டி சடலத்தை புதைத்தது தெரியவந்துள்ளது.
இதனையடுத்து போலீஸார் மதீனாவுக்குச் சென்று குழியில் புதைக்கப்பட்ட 19 வயது இளம்பெண்ணின் சடலத்தை மீட்டனர். தொடர்ந்து 3-வது குற்றவாளியான ரித்திக்கை போலீஸார் தேடிவருகின்றனர்.