2 குழந்தைகள், மனைவியை கொன்று தண்ணீர் தொட்டியில் வீசிய கொடூரம் - பகீர் சம்பவம்!
மனைவி மற்றும் மகள்களை கொன்று வீசிய நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குடும்ப தகராறு
கோவை, எம்ஜிஆர் நகரைச் சேர்ந்தவர் தங்கராஜ் (40). இவரது மனைவி புஷ்பா (35). இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள் இருந்தனர். தங்கராஜ் பெயின்டிங் உள்ளிட்ட சில வேலைகளை செய்து வருகிறார்.
மனைவி வீட்டு வேலைகக்குச் சென்று வந்துள்ளார். இந்நிலையில், தங்கராஜ் சரிவர வேலைக்கு செல்லாமல் தினமும் குடித்துவிட்டு வீட்டிலேயே இருந்துள்ளார். இதனால் மனைவியுடன் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.
தொடர்ந்து, தனது மனைவி மற்றும் குழந்தைகள் தண்ணீர் தொட்டிக்குள் கிடப்பதாக தங்கராஜ் அக்கம்பக்கத்தினரை அழைத்துள்ளார். பின் தகவலையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் மூன்று பேரின் உடல்களையும் மீட்டனர்.
கணவன் வெறிச்செயல்
தொடர்ந்து வழக்குப்பதிவு செய்து நடத்திய விசாரணையில் தங்கராஜ், குடிப்பதற்கு பணம் கேட்டு மனைவி புஷ்பாவிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். புஷ்பா பணம் தராமல் மறுத்து வாக்குவாதம் செய்ததாக தெரிகிறது. இதனால், மூத்த மகளை தண்ணீர் தொட்டிக்குள் தள்ளி விட்டுள்ளார்.
அவரை மீட்பதற்கு மனைவி தொட்டிக்குள் குதித்துள்ளார். அப்போது இளையமகளையும் தொட்டிக்குள் வீசி தொட்டியை மூடியால் மூடியுள்ளார்.
இதன் அடிப்படையில் தங்கராஜை கைது செய்துள்ளனர்.