மனைவி-மகனை பெட்ரோல் ஊற்றி எரித்துக்கொன்ற தந்தை - கொடூர சம்பவம்!

Crime Tirunelveli
By Sumathi Aug 25, 2025 07:30 AM GMT
Report

தொழிலாளி ஒருவர் மனைவி-மகனை பெட்ரோல் ஊற்றி எரித்துக்கொன்ற சம்பவம் அரங்கேறியுள்ளது.

குடும்ப விவகாரம் 

நெல்லை, சர்ச் தெருவை சேர்ந்தவர் தொழிலாளி சகாரியா(66). இவரது மனைவி மெர்சி. இவர்களுக்கு 2 மகன்களும், 1 மகளும் உள்ளனர்.

மனைவி-மகனை பெட்ரோல் ஊற்றி எரித்துக்கொன்ற தந்தை - கொடூர சம்பவம்! | Man Killed Wife And Son For Family Issue Nellai

சகாரியாவுக்கும், அவரது குடும்பத்தினருக்கும் இடையே அடிக்கடி பிரச்சினை ஏற்பட்டு வந்ததால், மெர்சி தனது 2 மகன்கள் மற்றும் மகளுடன் அதே தெருவில் தனியாக ஒரு வீட்டில் வசித்து வந்துள்ளார்.

இதில் மூத்த மகனுக்கு திருமணமாகியுள்ளது. மெர்சி தனது மகனின் திருமணத்திற்கு சகாரியாவை அழைக்கவில்லை என கூறப்படுகிறது. இந்நிலையில் ஹார்லி தனது உடைமைகளை எடுக்க தாய்-மகன் இருவரும் சகாரியாவின் வீட்டுக்குள் நுழைந்தனர்.

சிறுத்தையை கடித்து குதறிய தெருநாய் - அதிர்ச்சிக்குள்ளாக்கும் வீடியோ காட்சிகள்!

சிறுத்தையை கடித்து குதறிய தெருநாய் - அதிர்ச்சிக்குள்ளாக்கும் வீடியோ காட்சிகள்!

தந்தை வெறிச்செயல்

இதனால் ஆத்திரமடைந்த சகாரியா, தனது மனைவி, மகனை பிடித்து இழுத்து ஒரு அறைக்குள் தள்ளிவிட்டு கதவை பூட்டிவிட்டார். பின் பெட்ரோலை எடுத்து ஜன்னல் வழியாக ஹார்லி பினோ, மெர்சியை அடைத்து வைத்துள்ள அறைக்குள் ஊற்றி தீ வைத்துள்ளார்.

மனைவி-மகனை பெட்ரோல் ஊற்றி எரித்துக்கொன்ற தந்தை - கொடூர சம்பவம்! | Man Killed Wife And Son For Family Issue Nellai

இதில் அவர்கள் இருவரும் அலறிக்கொண்டிருந்த நேரத்தில், சகாரியாவும் தனது உடலில் பெட்ரோலை ஊற்றி தீ வைத்தார். தகவலறிந்து சம்பவ இடம் விரைந்த போலீஸாரும், தீயணைப்பு துறையினரும் அவர்களை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

அதில், மெர்சி, ஹார்லி பினோ உயிரிழந்தனர். சகாரியா தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். தற்போது இதுகுறித்து போலீஸார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.