உறவுக்கு இடையூராக இருந்த கணவரை கொன்ற ஆசிரியை - காதலனுக்கு தூக்கு!
கள்ளக்காதலுக்காக ஆசிரியை கணவரை கொலை செய்துள்ளார்.
தகாத உறவு
கர்நாடகா, சொரப் டவுன் பகுதியைச் சேர்ந்தவர் இம்தியாஸ். இவர் கலபுரகியில் உள்ள ஒரு அரசு பள்ளியில் ஆசிரியராக வேலை பார்த்து வந்தார்.
அப்போது அங்கு ஆசிரியையாக பணியாற்றி வந்த லட்சுமி என்ற பெண்ணை காதலித்தார். இந்த காதலுக்கு பெற்றோர் மறுப்பு தெரிவித்ததால், இருவரும் பதிவுத்திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு மகன் இருக்கிறார்.
தொடர்ந்து இருவரும் வேறு அரசு பள்ளிகளுக்கு பணி இடமாற்றம் செய்யப்பட்டனர். இதனால் லட்சுமி மற்றும் மகனுடன் வாடகை வீட்டில் வசித்து வந்தார். அங்கு தனது பள்ளிக்கூட தோழன் டிரைவர் கிருஷ்ணமூர்த்தியை சந்தித்து பழகியதில், அது தகாத உறவாக மாறியுள்ளது.
மரண தண்டனை
இந்நிலையில் மகன் இதுகுறித்து தந்தையிடம் தெரிவித்த நிலையில், அவர் மனைவியை கண்டித்துள்ளார். இதனையடுத்து, ரம்ஜானையொட்டி இம்தியாஸ் தனது பெற்றோர் வீட்டுக்கு சென்றுள்ளார். பின் மனைவியையும் அழைத்து வருவதாக திரும்பியதில், மனைவி தன் காதலனுடன் இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார்.
இதனால் தொடர்ந்த தகராறில், கணவனை கொலை செய்ய மனைவியும், காதலனும் திட்டமிட்டுள்ளனர். அதன்படி, லட்சுமி, அவரது கள்ளக்காதலன் கிருஷ்ணமூர்த்தி மற்றும் அவருடைய நண்பர் சிவராஜ் ஆகிய 3 பேரும் சேர்ந்து இரும்பு கம்பியால் தாக்கி இம்தியாசை படுகொலை செய்தனர்.
பின்னர் அவரது உடலை ஆட்டோவில் கொண்டு சென்று பத்ரா கால்வாயில் வீசியுள்ளனர். இச்சம்பவம் குறித்து அறிந்த இம்தியாசின் தம்பி போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர்கள் மூவரையும் கைது செய்தனர்.
கடந்த 9 ஆண்டுகளாக விசாரணை நடந்தது. தற்போது லட்சுமிக்கும், அவரது கள்ளக்காதலன் கிருஷ்ணமூர்த்திக்கும் மரண தண்டனையும், சாட்சியை அழிக்க உதவிய சிவராஜுக்கு 7 ஆண்டு கடுங்காவல் தண்டனையும் விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது.