மாடியில் கள்ளக்காதலுடன் மனைவி - பார்த்த ஆத்திரத்தில் கணவன் வெறிச்செயல்!
கள்ளக்காதலனுடன், மனைவியை கணவர் அரிவாளால் வெட்டி கொலை செய்துள்ளார்.
தகாத உறவில் மனைவி
கள்ளக்குறிச்சி, மலைகோட்டாளம் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி கொளஞ்சி. இவரது மனைவி லட்சுமி. கொளஞ்சி டிரைவராக இருந்ததால், அவ்வப்போது வீட்டுக்கு தாமதமாக வருவார்.
இதற்கிடையில், லட்சுமிக்கும், பக்கத்து வீட்டைச் சேர்ந்த தங்கராசு என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டு தகாத உறவாக மாறியுள்ளது. அருகருகே உள்ள வீடுகளில் வசித்து வந்ததால், அடிக்கடி இருவரும் தனிமையில் சந்தித்து பேசி வந்துள்ளனர்.
கணவன் வெறிச்செயல்
இதனையறிந்த கணவர் கண்டித்தும் லட்சுமி உறவை தொடர்ந்து வந்துள்ளார். இந்நிலையில், கணவர் மற்றும் மனைவி இருவரும் சாப்பிட்டுவிட்டு தூங்கினர். கணவர் உறங்கிய பிறகு, நள்ளிரவில் லட்சுமி தங்கராசுவை அழைத்து மாடியில் தனிமையில் இருந்துள்ளனர்.
அதிகாலையில் எழுந்த கணவன் மாடியில் இருவரையும் பார்த்த ஆத்திரத்தில், அரிவாளை எடுத்துக்கொண்டு வந்து இருவரையும் கழுத்தில் வெட்டினார். இருவரது தலைகளையும் அறுத்து, ஒரு பையில் வைத்து அந்த தலைகளைக் கையில் எடுத்துக்கொண்டார்.
பின்னர் பஸ் நிறுத்தத்துக்குச் சென்று, வேலூர் செல்வதற்கான பஸ்சில் ஏறினார். பின் காவல்நிலையத்திற்கு சென்று சரணடைந்துள்ளார். இந்த சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் பதற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது.