வகுப்பறையில் டீச்சருக்கு "மசாஜ்" - மாணவிகளுக்கு நேர்ந்த கொடூரம்!

Dharmapuri Education
By Sumathi Sep 03, 2025 10:11 AM GMT
Report

வகுப்பறையிலேயே மாணவிகள் ஆசிரியைக்கு மசாஜ் செய்துவிட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

டீச்சருக்கு மசாஜ்

அரூர், மாவேரிப்பட்டியில் அரசு தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் தலைமை ஆசிரியையாக கலைவாணி என்பவர் பணிபுரிந்து வந்தார்.

வகுப்பறையில் டீச்சருக்கு "மசாஜ்" - மாணவிகளுக்கு நேர்ந்த கொடூரம்! | Students Massage To Teacher School Dharmapuri

இங்கு 40 மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இந்நிலையில் மாணவிகளை தனக்கு கால் அமுக்கி விடுமாறு தலைமை ஆசிரியை கூறியதாக தெரிகிறது.

சிறுவனால் கர்ப்பமான மாணவி - கருக்கலைப்பு செய்ததால் பறிபோன உயிர்!

சிறுவனால் கர்ப்பமான மாணவி - கருக்கலைப்பு செய்ததால் பறிபோன உயிர்!

அதிகாரிகள் நடவடிக்கை

அதன்படி சில மாணவிகள் பள்ளி வளாகத்தில் அவருக்கு கால் அமுக்கி விட்டுள்ளனர். இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவியது.

harur

இதனையடுத்து மாவட்ட கல்வி அலுவலர் விஜயகுமார் மற்றும் அதிகாரிகள் அந்த பள்ளிக்கு சென்று விசாரணை நடத்தினார்கள்.

தொடர்ந்து தலைமை ஆசிரியையிடமும் விசாரணை நடத்தப்பட்டது. பின், தலைமை ஆசிரியை கலைவாணியை அந்த பள்ளியில் இருந்து இடமாற்றம் செய்து அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.