காதலியின் கழுத்தை நெறித்து கொன்ற கொடூரம் - தற்கொலை போல் செட்டப் செய்த காதலன்!

Attempted Murder Crime
By Vinothini Jun 10, 2023 07:26 AM GMT
Report

பெங்களூரில் தனது காதலியின் கழுத்தை நெறித்து கொன்றெட்டுவிட்டு அதனை காதலன் தற்கொலை போல் செட்டப் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

லிவிங் உறவு

ஹைதராபாத்தை சேர்ந்தவர் அகன்ஷா, இவர் பெங்களூருவில் உள்ள தொழில் நுட்ப நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். அங்கு டெல்லியை சேர்ந்த அர்பித் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. அவர் நிறுவனத்தின் மேல் பொறுப்பில் இருந்ததாக கூறப்படும் நிலையில், இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

man-killed-his-lover-in-bangalore

இதனால் ஏற்பட்ட நெருக்கத்தில் இருவருக்கிடையே காதல் மலர்ந்த நிலையில், இருவரும் ஒன்றாக லிவ் இன் உறவில் இருந்துள்ளனர். பின்னர் இருவருக்கும் வேறு ஒரு இடத்தில் வேலை கிடைத்து இவர் பெங்களூரில் தனது தோழியுடன் தங்கியுள்ளார், இவரது காதலன் ஹைதராபாத்தில் தங்கியுள்ளார்.

கொலை

இந்நிலையில், இருவரும் அடிக்கடி சந்தித்து வந்தனர். இவர்கள் சந்திப்பதற்காக இவரது தோழி வெளியே சென்றுள்ளார். பின்னர் இருவரும் ஒரு அறையில் இருந்துள்ளனர், வெகு நேரம் கழித்து இவரது தோழி வந்து கதவை தட்டியுள்ளார் அப்பொழுது யாரும் திறக்கவில்லை.

man-killed-his-lover-in-bangalore

மேலும், சந்தேகம் அடைந்த அவர், தன்னிடம் உள்ள மற்றொரு சாவி மூலம் கதவை திறந்து பார்த்தபொழுது, தன் தோழி தூக்கில் தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். தொடர்ந்து, போலீசார் இதுகுறித்து விசாரணை நடத்தியதில், இவர் கொலை செய்யப்பட்டது தெரியவந்தது.

மேலும், தலைமறைவான இவரது காதலனை பிடித்து விசாரணை நடத்தியதில், இவர்கள் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்பொழுது இவர் காதலியின் கழுத்தை நெறித்துள்ளார்.

பின்னர், தலையணையால் இவரது மூச்சை அமுக்கி கொலை செய்து விட்டு, தூக்கில் தொங்கவிட்டு தலைமறைவானது தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.