லிவ் இன் முறை வாழ்க்கை - விமான பணிப்பெண் தற்கொலை : பெங்களூரில் பகீர் சம்ப்வம்
காதலனுடன் லிவ் இன் ரிலேஷன்ஷிப்பில் வாழ்ந்து வந்த விமானப் பணிப்பெண் ஒருவர் தனது வீட்டு மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விமான பணிப்பெண்
இமாச்சலப் பிரதேசத்தை சேர்ந்த அர்ச்சனா என்ற இளம் பெண் விமா பணிப்பெண்ணாக பணியாற்றி வருகின்றார். இவருக்கும் ஆதேஷ் என்ற இளைஞரும் கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வருகின்றனர், அதே சமயம் இருவரும் திருமணம் செய்யாமல் லிவ் இன் ரிலேஷன் ஷிப்பில் வாழ்ந்து வந்தனர்.
தற்கொலை
இருவரும் பெங்களூரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்த நிலையில் அர்ச்சனா நேற்று இரவு திடீரென 12 மணிக்கு நான்காவது மாடியிலிருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டார். அவரை மீட்ட ஆதேஷ் மற்று அக்கம் பக்கத்தினர் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர் .
டேடிங் ஆப் பழக்கம்
அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அர்ச்சனா ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறினார். இந்த சமபவம் தொடர்பாக கொலை வழக்குபதிவு செய்த காவல்துறை அர்ச்சனாவின் காதலன் ஆதேஷை கைது செய்து அர்ச்சனா மரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதனிடையே அர்ச்சனாவுக்கும் ஆதேஷிக்கும் டேடிங் ஆப் மூலம் பழக்கம் ஏற்பட்டதாகவும் பின்னர் காதலாக மாறியதாகவும் காவல்துறை விசாரணையில் தெரியவந்துள்ளது.