நண்பராச்சேனு வீட்டிற்குள் விட்டதால் வந்த வினை - ஓடவிட்டு வெட்டிக் கொன்ற நபர்!
சென்னையில் நண்பர் ஒருவர் துரோகம் செய்ததால் ஆத்திரத்தில் வெட்டி கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கள்ளக்காதல்
சென்னை உள்ள காந்தி நகரை சேர்ந்த பிரபல ரவுடியாக உள்ளவர் 23 வயதான பவுல்ராஜ். இவர் மீது போக்சோ, அடிதடி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் நிலுவையில் உள்ளன.
அதே பகுதியை சேர்ந்த மற்றொரு ரவுடி 26 வயதான லோகேஷ், இவர்கள் இருவரும் நண்பராக பழகி வந்துள்ளார். இதனால் லோகேஷ் வீட்டிற்கு பவுல்ராஜ் அடிக்கடி சென்று வந்துள்ளார்.
அப்போது லோகேஷ் மனைவி சத்யாவுக்கும், பவுல்ராஜூக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. பின்னர் அதுவே கள்ளக்காதலாக மாறியது.
கொலை
இந்நிலையில், இந்த கள்ளக்காதல் குறித்து பல முறை பவுல்ராஜ் தனது மனைவியையும் நண்பரையும் கண்டித்துள்ளார். அதனை பெரிதாக எடுத்துக்கொள்ளாமல் இருவரும் உல்லாசமாக இருந்துள்ளனர்.
பல முறை கூறியும் கேட்காததால் ஆத்திரத்தில் அரிவாளால் ஓட ஓட துரத்தி சரமாரியாக வெட்டியுள்ளார். இதனால் ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்த அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
ஆனால் அவர் சிகிச்சை பலனின்றி உயிரழந்ததாக கூறப்படுகிறது. தொடர்ந்து, போலீசார் அவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.