Tuesday, Jul 22, 2025

மருமகளை வெட்டி தலையுடன் காவல் நிலையத்திற்கு சென்ற மாமனார் - ஷாக்கான போலீசார்!

Attempted Murder Uttar Pradesh
By Vinothini 2 years ago
Report

ஆக்ராவில் ஒருவர் தன் மருமகளின் தலையை வெட்டி காவல் நிலையத்திற்கு சென்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குடும்பம்

உத்தரப்பிரதேச மாநிலம், ஆக்ராவில் உள்ள மாலிக்பூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ரகுவீர் சிங்(62). இவரது மகன் கௌரவ் சிங், இவர் கடந்த 2018-ம் ஆண்டு காவல் துறை பணியில் சேர்ந்தார்.

man-killed-his-daughter-in-law

அவரது மனைவி பிரியங்கா சிங், இவருக்கு 28 வயது, இவர்களுக்கு எட்டு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது, இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். ரகுவீர் சிங்கின் மூத்த மகன் இறந்ததால் இவரது மனைவி, மாமனார், பிரியங்கா மற்றும் இவரது குழந்தைகள் அணைந்தவரும் ஒன்றாக வசித்து வருகின்றனர்.

கொலை

இந்நிலையில், ஒன்றாக இருக்கும் இரண்டு மருமகளுக்கும் அடிக்கடி சண்டை ஏற்பட்டு வந்தது. நேற்று இருவரும் சண்டை போட்டு கொண்டிருந்தனர், இடையில் சமாதானம் செய்ய சென்ற மாமனாரை இளைய மருமகள் பிரியங்கா கீழே தள்ளிவிட்டார்.

man-killed-his-daughter-in-law

இதனால் ஆத்திரத்தில் அருகில் இருந்த கோடாரியை எடுத்து அவர் மருமகளை சரமாரியாக தாக்கியுள்ளார். பின்னர் அவரது தலையை துண்டாக வெட்டி காவல் நிலையத்தில் தலையுடன் சென்று சரணடைந்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.