கொரோனா பரவல் அதிகரிப்பு எதிரொலி ; தாஜ்மஹால், ஆக்ரா கோட்டைக்கான நேர்முக டிச்கெட் விநியோகம் ரத்து
தாஜ்மஹால், ஆக்ரா கோட்டையின் நேர்முக டிக்கெட் கவுன்டர்கள் கோவிட்-19 காரணமாக மூடப்பட்டுள்ளன.
கொரோனா லாக்டவுன் முடிந்து சமீபத்தில் டிசம்பரில் தொடங்கப்பட்ட தாஜ்மஹால், ஆக்ரா கோட்டையின் நேர்முக டிக்கெட் விநியோகம் கோவிட்-19 அதிகரிபபால் மீண்டும் ரத்து செய்யப்பட்டுள்ளது.
எனினும், இது போன்ற நினைவுச்சின்னங்களை பார்வையிடுவதற்கான டிக்கெட்டுகளை பார்வையாளர்கள் இப்போது ஆன்லைனில் பதிவு செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போதைய கோவிட்-19 நிலைமையைக் கருத்தில் கொண்டு, உத்தரப் பிரதேசத்தின் ஆக்ராவில் உள்ள தாஜ்மஹால் மற்றும் ஆக்ரா கோட்டையின் டிக்கெட் கவுன்டர்கள் திங்கள்கிழமை முதல் மூடப்பட்டுள்ளன.
கண்காணிப்பு தொல்லியல் ஆய்வாளர் டாக்டர் ராஜ் குமார் படேல் கூறுகையில், "டிக்கெட் கவுன்டர்களுக்கு வெளியே மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. இதைத் தொடர்ந்து, டிக்கெட் கவுன்டர்களை மூட முடிவு செய்துள்ளோம்.
இருப்பினும், நினைவுச் சின்னங்கள் முழுமையாக மூடப்படவில்லை," என்றார்.
இதற்கிடையில், உத்தரப் பிரதேசத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 514 புதிய கோவிட் -19 தொற்றுகள் பதிவாகியுள்ளன என்று திங்களன்று சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம் தெரிவித்துள்ளது குறிபிடத்தக்கது.