மூதாட்டியை கல்லால் அடித்து, நரமாமிசத்தை தின்ற இளைஞன் - பயந்து அலறிய மக்கள்!
ஆடு மேய்த்து கொண்டிருந்த மூதாட்டியை ஒரு இளைஞன் கல்லால் அடித்து கொன்று நரமாமிசத்தை தின்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கொடூர கொலை
ராஜஸ்தான் மாநிலம், பாலி மாவட்டத்தில் உள்ள சர்தானா என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் 65 வயதான சாந்தி தேவி என்னும் மூதாட்டி.
இவர் கடந்த வெள்ளிக்கிழமை தனது வீட்டில் இருந்து வயல் பகுதிக்கு ஆடுகளை ஓட்டி மேய்சலுக்காக சென்றுள்ளார்.
அப்பொழுது அங்கு வந்த இளைஞன் கல்லால் அந்த மூதாட்டியை தக்க தொடங்கினர். அப்பொழுது அந்த இளைஞனின் தோற்றமும், செயல்களும் விசித்திரமாக இருந்தது. இவர் தாக்கியதில் அந்த மூதாட்டி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இறந்த அவரின் உடலை பிச்சு சாப்பிட தொடங்கியுள்ளார்.
அலறிய மக்கள் இந்நிலையில், அந்த பக்கமாக வந்த அந்த மூதாட்டியின் மகன் பிரேன் இந்த சம்பவத்தை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார்.
அவர் பயந்து அங்கு இருந்து ஓடி சென்று ஊர் மக்களை அழைத்து வந்துள்ளார். ஊர் மக்களும் இதனை கண்டு அதிர்ந்து நின்றனர்.
உடனே காவல் துறைக்கு தகவல் தெரிவித்தனர், சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் அந்த இளைஞரை கைது செய்தனர்.
விசாரணை
நடத்தியதில், அவர் மகாராஷ்டிரா மாநிலம் மும்பையை சேர்ந்த சுரேந்திர தாக்கூர் என்று தெரியவந்துள்ளது.
இவர் ராபீஸால் பாதிக்கப்பட்ட நாயால் கடிக்கப்பட்டவர், அதற்கு உரிய சிகிச்சை பெறாததால் இத்தகைய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார் என்பதும் தெரிய வந்துள்ளது.
இவருக்கு ஹைட்ரொபோபியா எனப்படும் நாய் கடி பாதிப்பின் முதிர்ந்த நோய் தன்மை ஏற்பட்டுள்ளது.
இந்த அரிய நோய் தன்மை கொண்டவர்களுக்கு நீரை பார்த்தாலே அச்சம் ஏற்படும்.
மேலும், மூதாட்டியின் மகன் கொடுத்த புகாரின் பேரில் சுரேந்திரா மீது வழக்கு பதிவு செய்த காவல்துறை அவரை சிறையில் அடைத்தனர்.