"கல்லால் அடித்து, அரிவாளால் கழுத்தில் வெட்டினோம்" - SSI கொலை வழக்கில் குற்றவாளியின் பகீர் வாக்குமூலம்

killed trichy ssiboominathan
By Irumporai Nov 23, 2021 11:55 AM GMT
Report

திருச்சியில் உதவி ஆய்வாளர்  உதவி ஆய்வாளரை எவ்வாறு கொலை செய்தனர் என்பது குறித்து குற்றவாளி மணிகண்டன் பரபரப்பு வாக்குமூலம் கொடுத்துள்ளார்.

திருச்சி மாவட்டம் நவல்பட்டு காவல்துறை உதவி ஆய்வாளர் பூமிநாதன் நேற்று அதிகாலை ஆடு திருடிச்சென்ற நபர்களை மடக்கிப் பிடித்தார்.

அப்போது எஸ்.ஐ பூமிநாதனை அந்த கும்பல் வெட்டிக்கொலை செய்துவிட்டு தப்பிச் சென்றது. இதையடுத்து போலிஸார் தனிப்படை அமைத்து தீவிரமாகக் குற்றவாளிகளைத் தேடினர்.

பின்னர் உதவி ஆய்வாளரை கொலை செய்த சிறுவர்கள் உட்பட மூன்று பேரை போலிஸார் அதிரடியாகக் கைது செய்தனர். இதையடுத்து பூமிநாதனை கொலை செய்த மணிகண்டன் போலிஸாரிடம் பரபரப்பு வாக்குமூலம் கொடுத்துள்ளார்.

இதுகுறித்து போலிஸார் கூறுகையில், "ஆய்வாளர் பூமிநாதனைக் கொலை செய்த மணிகண்டன், ஆடுகளைத் திருடி விற்பனை செய்வதை ஒரு தொழிலாகவே பார்த்து வந்துள்ளார். இதற்கு சிறுவர்களையும் பயன்படுத்தி வந்துள்ளார்.

"கல்லால் அடித்து, அரிவாளால் கழுத்தில் வெட்டினோம்"  -  SSI கொலை வழக்கில் குற்றவாளியின் பகீர் வாக்குமூலம் | Confession Of Manikandan Killed Ssi Boominathan

இந்நிலையில் சம்பவத்தன்று தோகூரில் ஒரு ஆட்டை திருடிக்கொண்டு இருசக்கர வாகனத்தில் வந்துள்ளனர். அப்போதுதான் இந்த மூன்று பேரும் ஆய்வாளர் பூமிநாதனிடம் சிக்கிக் கொண்டனர். அப்போது இந்த திருட்டு குறித்து மணிகண்டனின் தாயிடம் பூமிநாதன் செல்போனில் தெரிவித்துள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த மணிகண்டன் அங்கிருந்த கல்லை எடுத்து பூமிநாதன் தலையில் அடித்துள்ளார். பின்னர் இருசக்கர வாகனத்தில் வைத்திருந்த அரிவாளை எடுத்து அவரது தலை மற்றும் கழுத்தில் வெட்டியுள்ளார். இதைப் பார்த்து உடன் வந்த இரண்டு சிறுவர்களும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

பின்னர் மூன்று பேரும் அவர்கள் வந்த இருசக்கர வாகனத்திலேயே அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர். மேலும் உறவினர் ஒருவரின் துக்க நிகழ்ச்சிக்குச் செல்ல பணம் தேவைப்பட்டதால் இவர்கள் ஆட்டைத் திருடி விற்றுள்ளதாக தெரிவித்துள்ளனர்.