கிணற்றில் கொன்று வீசப்பட்ட கணவன் - கள்ளக்காதலனுடன் தலைமறைவான மனைவி!

Attempted Murder Tiruvannamalai Crime
By Sumathi Dec 31, 2022 03:30 AM GMT
Report

கணவனை மனைவியே கள்ளக்காதலனுடன் சேர்ந்து கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தகாத உறவு

திருவண்ணாமலை, கடுக்கனூர் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் லட்சுமிகாந்த் - ராஜேஸ்வரி தம்பதி. இவர்களுக்கு பெண் குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில், லட்சிமி காந்த் கிணற்றில் சடலமாக கிடந்துள்ளார். அது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டதில்,

கிணற்றில் கொன்று வீசப்பட்ட கணவன் - கள்ளக்காதலனுடன் தலைமறைவான மனைவி! | Man Killed By His Wife Boyfriend Tiruvannamalai

மனைவி சிப்காட்டில் வேலை செய்து வந்துள்ளார். அங்கு உதயசூரியன் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ல்ளது. இதனால் செல்போனில் அடிக்கடி பேசியும் வந்துள்ளார். இதனைப் பார்த்து ஆத்திரமடைந்த கணவர் அதனை கண்டித்துள்ளார். ராஜேஸ்வரி இதனை உதயசூரியனிடம் கூறியுள்ளார்.

கணவன் கொலை

அதனைத் தொடர்ந்து, கணவனை கொலை செய்ய முடிவு செய்துள்ளனர். அதனால், உறவினர் பாண்டியன் (வயது 23) இருவரும் கடந்த 23-ம் தேதி லட்சுமிகாந்தை செல்போன் மூலம் அழைத்துள்ளனர். இதனையடுத்து மூவரும் ஒன்றாக அமர்ந்து மது அருந்தியுள்ளனர்.

மதுபோதையில் உதயசூரியன் மற்றும் பாண்டியன் இருவரும் சேர்ந்து லட்சுமிகாந்தை கழுத்தை நெறித்து படுகொலை செய்துள்ளனர். அதனையடுத்து உடலை கிணற்றில் தூக்கி வீசியுள்ளனர். தொடர்ந்து, ராஜேஸ்வரி, உதயசூரியன், பாண்டியன் மூவரும் தலைமறைவாகியுள்ளனர்.

இந்நிலையில், மூவரையும் போலீஸார் தேடி வந்த நிலையில் பெரணமல்லூர் பேருந்து நிலையம் அருகே போலீசார் கைது செய்தனர்.