திருவிழாவிற்கு வந்த மூதாட்டி, கூப்பிட்டு சென்று கல்லை போட்டு கொன்ற நபர் - வாலிபர் வெறிச்செயல்!
வாலிபர் ஒருவர் மூதாட்டியை அழைத்து கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கொடூர கொலை
மதுரை அழகர் கோவில் பகுதியில் பூங்கா ஒன்று உள்ளது, அதன் அருகே நேற்று திடீரென அவர் பாறை இடுக்கில் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தார். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்,
அப்பொழுது ஒரு சிசிடிவி காட்சியில் மூதாட்டியுடன் இளைஞர் ஒருவர் பேசிக்கொண்டே நடந்து செல்லும் காட்சி இடம் பெற்றிருந்தது.
போலீஸ் விசாரணை
இந்நிலையில், அந்த சிசிடிவி காட்சிகளை அடிப்படையாக வைத்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இதற்கு தனிப்படை போலீசார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வந்தனர், தலைமறைவாக இருந்த வாடிப்பட்டியைச் சேர்ந்த கருப்பையா என்ற அந்த இளைஞரை கிடாரிப்பட்டியில் வைத்து போலீசார் கைது செய்தனர்.
அவரிடம் இருந்து போலீசர் ஐந்து சவரன் நகை மற்றும் பத்தாயிரம் ரூபாய் பணம் பறிமுதல் செய்தனர். மேலும், விசாரணையில் திருவிழாவிற்கு வந்த மூதாட்டியை வனப்பகுதிக்கு அழைத்து சென்று பணம், நகையைப் பறித்துக் கொண்டு கொலை செய்தது தெரிவியவந்தது.