தகாத உறவு; உதறி தள்ளிய பெண் - பழிவாங்க குழந்தைகளை அடித்தே கொன்ற கொடூரன்!
கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த குழந்தைகளை கள்ளக்காதலன் கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
தகாத உறவு
தருமபுரி மாவட்டத்தில் உள்ள முண்டாசுப்பறவடை கிராமத்தை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன்(30). இவருக்கு பிரியா (24) என்பவருடன் திருமணம் முடிந்து இருவருக்கும் சஷ்வந்த் (6), தர்ஷன் (3) என்ற 2 மகன்கள் இருந்தனர்.
இந்த நிலையில், அதே பகுதியை சேர்ந்த வெங்கடேசன் என்பவருக்கும், பிரியாவுக்கும் நீண்ட நாட்களாக கள்ளத்தொடர்பு இருந்து உள்ளது.ஆனால், இதை தவறு என உணர்ந்த பிரியா வெங்கடேசனிடம் "இனிமேல் நாம் பழகுவதை நிறுத்தி கொள்ளவேண்டும். என் குழந்தைகளுக்காக வாழப் போகிறேன்" என்று சொல்லியிருக்கிறார்.
இதற்கு மறுப்பு தெரிவித்த வெங்கடேசன், இந்த உறவை துண்டித்தால் குழந்தைகளைக் கொலை செய்து விடுவதாக மிரட்டியுள்ளார். இருப்பினும் பிரியா தான் எடுத்த முடிவில் உறுதியாக இருந்தார். இதன் காரணமாக ஆத்திரமடைந்த வெங்கடேசன் பிரியா வீட்டில் யாரும் இல்லாத நேரம் பார்த்து இரண்டு குழந்தைகளையும் வண்டியில் அழைத்துச் சென்றுள்ளார்.
கொன்ற கொடூரன்
பிறகு இதே கிராமத்தில் உள்ள ஒரு காட்டுப்பகுதியில் 2 சிறுவர்களை கொண்டு சென்று அவர்களது கண்களில் மிளகாய் பொடியை தூவி தலை, காது பகுதிகளில் கற்களை வைத்து அடித்தே கொன்றுள்ளான். பின் ஊருக்குள் சென்ற அவர், இரண்டு சிறுவர்களையும் வடமாநில இளைஞர்கள் கடத்தி சென்றனர் என்று கூறியுள்ளார்.
இந்த தகவலறிந்து வந்த போலீசார், குழந்தைகளின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது சந்தேகத்தின் பேரில் வெங்கடேசனை போலீசார் விசாரிக்கையில் அவர் பதற்றமாய் பதிலளித்துள்ளார்.
இதனையடுத்து அவரை தீவிரமாக விசாரிக்கையில் தான் கொலை செய்ததை வெங்கடேசன் ஒப்புக்கொண்டார். இந்த சம்பவம் குறித்து போலீசார் அவர் மீது வழக்கு பதிவு செய்து தொடர்ந்து சாரணை மேற்கொண்டு வருகின்றனர்.