அண்ணியுடன் நெருக்கம்... ஆத்திரத்தில் நண்பனை கழுத்தறுத்த அதிர்ச்சி சம்பவம்!

Attempted Murder Relationship Bihar Death
By Sumathi 2 மாதங்கள் முன்

அண்ணியுடன் கள்ளக்காதலில் இருந்த நண்பனை, தொழிலாளி கொலை செய்துள்ள சம்பவம் அரங்கேறியுள்ளது.

தகாத உறவு

பிகார், முஜாக்புர் பகுதியைச் சேர்ந்தவர்கல் பங்கஜ் பாஸ்வான்(25) மற்றும் சீப்ஜி(22). இருவரும் நண்பர்கள். கிருஷ்ணகிரியில் தங்கி, ஒரு தனியார் அப்பார்ட்மென்ட்டில் கட்டிட வேலை செய்து வந்தனர்.

அண்ணியுடன் நெருக்கம்... ஆத்திரத்தில் நண்பனை கழுத்தறுத்த அதிர்ச்சி சம்பவம்! | Man Kill His Friend Due To Illegal Relationship

இந்நிலையில், தன்னுடன் தங்கியிருந்த பங்கஜை காணவில்லை என மற்றொரு நண்பருடன் சேர்ந்து தேடியுள்ளார் சீப்ஜி. அப்போது முட்புதரில் பங்கஜ் கொலை செய்யப்பட்டு சடலமாக கிடந்ததை கண்டனர். உடனே போலீஸாருக்கு தகவல் கொடுக்கப்பட்டு, சடலத்தை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

கழுத்தறுத்து கொலை

அதில் கழுத்தை இறுக்கு கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. அதனைத் தொடர்ந்து நடத்திய விசாரணையில், உடன் தங்கியிருந்த சீப்ஜிதான் கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். மேலும், சொந்த ஊரான முஜாக்பூருக்கு சென்றபோது,

பங்கஜ் பாஸ்வான் சீப்ஜியின் அண்ணியுடன் கள்ளக்காதலில் இருப்பதைக்கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சீப்ஜி, கடந்தவாரம் நண்பன் பங்கஜ்ஜை வேலைக்கு செல்வோம் என வற்புறுத்தி ஒசூருக்கு அழைத்து வந்துள்ளார்.

தீவிர விசாரணை

அப்போதும் சீப்ஜிக்கு தெரியாமல் பங்கஜ் தொலைப்பேசியில் அவரின் அண்ணியுடன் போனில் பேசி வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், நேற்றிரவு தூங்கிக்கொண்டிருந்த பங்கஜ் பாஸ்வானை, சீப்ஜி வெளியில் அழைத்து தூக்க கலக்கத்தில் இருந்தவனை அடித்து, கழுத்தை நெறித்து கொலை செய்துள்ளார்.

தொடர்ந்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.