வேறு ஒருவருடன் திருமணம்; பெண்ணை கடத்திய பாலியல் குற்றவாளி - அதிர்ச்சி வீடியோ!
இளம்பெண்ணை, நபர் ஒருவர் வீடு புகுந்து கடத்திய வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பாலியல் வன்கொடுமை
மத்திய பிரதேசம், அசோக் நகர் பகுதியைச் சேர்ந்த இளம்பெண்(22) ஒருவருக்கு திருமணம் நடைபெறவிருந்தது. இந்நிலையில், அவருடைய வீட்டிற்கு வாள், இரும்பு தடி உள்ளிட்ட ஆயுதங்களுடன் ஒரு கும்பல் வந்துள்ளது.
இதில், காலு என்ற சலீம் கான் என்ற நபர் அந்த இளம்பெண்ணுக்கு ஏற்கனவே அறிமுகமானவர். அவர்கள் அந்த இளம்பெண்ணை வீட்டில் இருந்து வெளியே இழுத்து வந்துள்ளனர்.
மிரட்டிய கும்பல்
உடனே தடுக்க வந்த தந்தை மற்றும் சகோதரரை கை, கால் பகுதிகளில் அந்த கும்பல் ஆயுதங்களால் கடுமையாக தாக்கியுள்ளனர். இந்த சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் வந்துள்ளனர். அதனால் பெண்ணை விட்டு, விட்டு அந்த கும்பல் ஆயுதங்களுடன் பைக்கில் ஏறி தப்பியுள்ளனர்.
#मध्यप्रदेश के अशोकनगर जिले में तलवार की नोक पर बेटी को अगवा किया गया, पिता और भाई ने विरोध किया तो बदमाशों ने हाथ-पांव तोड़े, एफआईआर से भी कतराती रही पुलिस | सरकार को लफ़्फ़ाज़ी से फ़ुर्सत नहीं।
— Nitish Kumar NDRC (@DRCNitishkumar) May 31, 2024
मोदी जी, ध्यान से ध्यान करियेगा, ये बेटी आपके ध्यान में नज़र आयेगी। #NarenderModi pic.twitter.com/WKQ2kFoeVO
இதனையடுத்து அந்த இளம்பெண் மற்றும் அவருடைய தந்தை அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சலீம் கான் என்பவரை கைது செய்துள்ளனர். தொடர் விசாரணையில், இந்த சம்பவத்திற்கு முன் அந்த இளம்பெண்ணை, சலீம் கான் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.
அதனை வீடியோவாகவும் எடுத்து வைத்து மிரட்டியுள்ளார். மேலும், அந்த பெண் மற்றும் குடும்பத்தினருக்கு அவதூறு ஏற்படுத்தும் நோக்கில் அந்த வீடியோவை பயன்படுத்தி, பெண்ணை வேறு யாரையும் திருமணம் செய்யக்கூடாது என மிரட்டியது தெரியவந்தது. இதுகுறித்த வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.