மனைவி உடலை பிரீசரில் வைத்த கணவன் - போலீஸ் விசாரணை!

Crime Death
By Vinothini Jul 03, 2023 07:17 AM GMT
Report

மத்திய பிரதேசத்தில் மனைவியின் இறந்த உடலை அவரது கணவன் பிரீசரில் வைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மனைவியின் நோய்

மத்திய பிரதேச மாநிலம், ரேவா மாவட்டத்தை சேர்ந்தவர் பாரத் மிஸ்ரா. இவரது மனைவி சுமித்ரி, இவருக்கு 40 வயது ஆகிய நிலையில், கடந்த சில நாட்களாக மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்பட்டிருந்தார். இதற்காக சிகிச்சை பெற்று வந்ததாகவும் கூறப்படுகிறது.

man-kept-his-wife-body-in-freezer

மேலும், இவர் கடந்த 30-ம் தேதி இறந்து விட்டதாக அவரது குடும்பத்தினருக்கு பாரத் மிஸ்ரா போன் செய்து கூறியுள்ளார். அதனால் அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர், விரைவாக இவரது வீட்டிற்கு சென்றனர். அப்பொழுது அங்கு அவரது உடலை பிரீசரில் வைத்திருந்தார்.

போலீஸ் விசாரணை

இந்நிலையில், அவரது குடும்பத்தினருக்கு சந்தேகம் ஏற்பட்டது. அதனால் அவரது சகோதரர் அபய் திவாரி கோட்வாலி போலீஸ் நிலையத்தில் ஒரு புகார் அளித்தார். அதில் எனது சகோதரிக்கும் இடையே தகராறு இருந்து வந்தது.

man-kept-his-wife-body-in-freezer

அதனால் எனது சகோதரி இறந்துள்ளார், உடனடியாக அவர் எனது குடும்பத்தினருக்கோ, உறவினர்களுக்கோ தகவல் தெரிவிக்காமல் தாமதமாக கூறியுள்ளார். அவர் எனது சகோதரியை அடித்து கொலை செய்திருக்கலாம் என நாங்கள் கருதுகிறோம். இதுகுறித்து விசாரணை நடத்த வேண்டும் என கூறியுள்ளார். தொடர்ந்து, இந்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.