தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி கஞ்சா செடி வளர்ப்பு.. வாலிபரின் மாஸ்டர் பிளான்!
தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, வீட்டில் கஞ்சா தோட்டத்தை வளர்த்து வந்த சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.
கஞ்சா
உத்தரப்பிரதேச மாநிலம், கிரேட்டர் நொய்டாவில் அடுக்குமாடிக் குடியிருப்பு உள்ளது. இந்த குடியிருப்பில் கஞ்சா பயிரிட்டு விற்பனை செய்து வருவதாக வருவதாகக் காவல் துறையினருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. அதனடிப்படையில், அடுக்குமாடிக் குடியிருப்பில் காவல் துறையினர் சோதனை நடத்தினர்.
அப்போது ராகுல் சவுத்ரி தங்கியிருந்த குடியிருப்பில் சட்டவிரோதமாக 50க்கும் மேற்பட்ட தொட்டிகளில், கஞ்சா செடி பயிரிடப்பட்டு இருந்தனர். இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த காவல்துறையினர் அந்த வாலிபரைக் கைது செய்து விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணை
காவல் துறையின் முதற்கட்ட விசாரணையில் ராகுல் சவுத்ரி தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, அதாவது சிறப்பான உபகரணங்கள் மூலம் சூரிய ஒளியின்றி செயற்கையான ஒளி மூலம் கஞ்சா செடிகளை வளர்க்கும் முறையை ஆன்லைன் மூலம் கற்றுக்கொண்டு ராகுல் தனது வீட்டில் கஞ்சா தோட்டத்தை வளர்த்துத் தெரியவந்துள்ளது.
மேலும் 80 கஞ்சா செடிகள் பயிடப்பட்டுள்ள நிலையில் 2 கிலோ கஞ்சாவையும் பறிமுதல் செய்தனர். இதன் பின்னணியில் யார் இருக்கிறார்கள் என்பது குறித்து நொய்டா காவல்துறையினர் விசாரணையைத் தீவிரப்படுத்தி உள்ளனர்.