உ பி யை தொடர்ந்து ம.பி.யிலும்..மனித வேட்டையாடும் ஓநாய்கள் - அச்சத்தில் உறைந்த மக்கள்!
உத்தரப்பிரதேசத்தைத் தொடர்ந்து மத்தியப் பிரதேசத்திலும் குடியிருப்புப் பகுதியில் நுழைந்து, மனிதர்களைத் ஓநாய்கள் தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஓநாய்கள்
உத்தரப் பிரதேசத்தில் உள்ள பஹ்ரைச் மாவட்டத்தில் கடந்த 2 மாதங்களாக 7 குழந்தைகள், ஒரு பெண் என மொத்தம் 8 பேரை ஓநாய்கள் கடித்துக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
மேலும் ஓநாய்கள் தாக்கியதில் இதுவரை 25க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர். இந்த ஓநாய்க் கூட்டங்களால் சுமார் 50 கிராம மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.
தொடர்ந்து காவல் துறையினர் மற்றும் வனத்துறையினர் ஓநாய்களைப் பிடிக்க ஆங்காங்கே பொறிகள், கூண்டுகள் வைக்கப்பட்டு நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.
தாக்குதல்
இந்தச் சூழலில் மத்தியப் பிரதேச மாநிலம் கான்வா மாவட்டம் மல்கோவான் கிராமத்தைச் சேர்ந்த ஒரே குடும்பத்தில் 5 பேரைக் கடித்துக் குதறிய ஓநாயை அக்கம்பக்கத்தினர் திரண்டு விரட்டியடித்தனர்.
தகவலறிந்த வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்
உத்தரப்பிரதேசத்தைத் தொடர்ந்து மத்தியப் பிரதேசத்திலும் குடியிருப்புப் பகுதியில் நுழைந்து, மனிதர்களைத் தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.