என் வேண்டுதலை ஏன் நிறைவேற்றல.. கோவில்களை இடித்து தரைமட்டமாக்கிய இளைஞர்!
இளைஞர் ஒருவர் கோவில்களை இடித்து தரைமட்டமாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வேண்டுதல்
மத்திய பிரதேசம், இந்தூரைச் சேர்ந்தவர் நரேஷ் குமார் (24). பொறியியல் பட்டதாரியான இவருக்கு சிறு வயதில் இருந்தே கடவுள் பக்தி அதிகம் எனக் கூறப்படுகிறது. இந்நிலையில், இவருக்கு வீட்டில் திருமண ஏற்பாடுகள் நடந்து கொண்டிருந்தன.

ஆனால், எந்தப் பெண்ணுக்கும் இவரை பிடிக்கவில்லை. சிறு வயதில் விபத்து ஒன்றில் அவரது ஒரு கண்ணில் அடிபட்டதில் அந்தக் கண் எப்போதும் மூடியபடியே இருக்குமாம். இதனால் பல பெண்கள் அவரை நிராகரித்துள்ளன. ஒருக்கட்டத்தில் தனக்கு திருமணமே நடக்காது என்ற பயத்தில் பல மருத்துவர்களை பார்த்துள்ளார்.
ஆதங்கம்
ஆனால் அது பலனளிக்கவில்லை. எனவே, ஒவ்வொரு கோயிலாக சென்று ஆயிரக்கணக்கில் செலவு செய்து பூஜைகளை செய்துள்ளார். ஆனாலும் அவரது கண் திரும்ப கிடைக்கவில்லை. இதனால் ஆத்திரத்தில் சந்தன் நகர், சாத்ரிபூரா ஆகிய பகுதிகளில் உள்ள இரண்டு சிறிய
இந்து கோயில்களை இரவோடு இரவாக சுத்தியலால் இடித்து தள்ளினார். அதனையடுத்த புகாரில் நரேஸ் கைது செய்யப்பட்டார். விசாரணையில், இன்னும் 3 கோயில்களை இடிக்க திட்டமிட்டிருந்ததாக தெரியவந்தது.