வீட்டுக்கு வந்த மருமகனை உருட்டு கட்டையால் அடித்து துரத்திய மாமனார், மாமியார்- viral video!
மருமகனை மாமனார், மாமியார் சேர்ந்து உருட்டு கட்டையால் தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மருமகன்..
கேரளா மாநிலம் திருச்சூர் மாவட்டத்தில் அமைந்துள்ள சோலக்கரை பகுதியை சேர்ந்தவர் மொய்தீன்- ஷபியா தம்பதி. இவர்களது மகள் ரக்பீனா. இவருக்கும், சுலைமான் என்பவருக்கும் 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றுள்ளது.
திருமணம் முடிந்த சில காலத்திலேயே அவ்வபோது சுலைமானுக்கும், ரக்பியாவிற்கும் சண்டை ஏற்பட்டுள்ளது. இதனால் ரக்பீனா கோபித்து கொண்டு அடிக்கடி தனது தந்தை வீட்டிற்கு செல்வதுமாக இருந்து வந்துள்ளார்.
இந்த நிலையில், சுமார் 1 மாதங்களுக்கு முன்பு வழக்கம் போல கணவன் மனைவிக்குள் சண்டை ஏற்பட்ட நிலையில், ரக்பீனா மீண்டும் தனது தந்தை வீட்டுக்கு சென்றுள்ளார். நேற்று பக்ரீத் பெருநாள் என்பதால் சுலைமான் தனது குழைதைக்காக புதிய உடைகள் மற்றும் இனிப்புகளை வாங்கி தனது மாமனார் வீட்டுக்கு சென்றுள்ளார்.
உருட்டு கட்டை அடி
அங்கு சுலைமான் சற்று எதிர்பாராத விதமாக மொய்தீன் ஷபியா தம்பதியினரின் மற்றும் ரக்பீனா ஆகியோர் இணைந்து உருட்டு கட்டையினால் சராமரியாக தாக்க தொடங்கினார். இப்படியே போனால் அவர் இறந்து விடுவார் என எண்ணிய அக்கம்பக்கத்தனர். உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
இந்த தகவலறிந்து விரைந்து வந்த போலீசார் சுலைமானை மீட்டு அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இதில் அவரது கைகள் மற்றும் உடல் முழுக்க பலத்த காயம் ஏற்பட்டது.
இது தொடர்பாக போலீசார் வழக்குபதிவு செய்து விசாரனை நடத்துகின்றனர். மருமகனை மாமியார், மாமனார், மனைவி என கூட்டு சேர்ந்து தாக்கும் வீடியோ தற்போது வேகமாக பரவி வருகிறது