வாட்ஸ்அப் ஸ்டேட்டஸால் ஏற்பட்ட கொடூர சம்பவம் : கொலையில் முடிந்த பெண்களின் சண்டை

mumbai familyfight whatsappstatusmurder
By Petchi Avudaiappan Feb 14, 2022 05:34 PM GMT
Petchi Avudaiappan

Petchi Avudaiappan

in இந்தியா
Report

மகாராஷ்ட்ராவில் வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் வைத்த விவகாரத்தில் பெண் ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மகாராஷ்டிரா மாநிலம் மும்பை சிவாஜி நகர் பகுதியை சேர்ந்த லீலாவதி தேவி பிரசாத் என்பவருக்கு  20 வயதில் ஒரு மகள் உள்ளார்.  இவர் நேற்று முன்தினம் தனது வாட்ஸ்அப்பில் ஸ்டேட்டஸ் ஒன்றை வைத்துள்ளார். இதை லீலாவதியின் மகளுடன் கருத்து வேறுபாட்டில் இருந்து வந்த அவரது தோழி பார்த்துள்ளார். 

தன்னைப்பற்றி எழுதியதாக நினைத்து வருத்தம் அடைந்த அப்பெண் ஆத்திரத்தில் தனது குடும்பத்தினரிடம் இதுபற்றி கூறியுள்ளார்.  இதனால்  குடும்பத்தினர் சிலர் லீலாவதி தேவியின் வீட்டிற்கு சென்று லீலாவதி தேவி, அவரது மகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். 

வாக்குவாதம் முற்றிய நிலையில் லீலாவதி தேவி, அவரது குடும்பத்தினரை தோழி குடும்பத்தினர்  உருட்டு கட்டை உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களை கொண்டு தாக்கியுள்ளனர். இதில் லீலாவதி தேவி படுகாயமடைந்த நிலையில் இந்த தாக்குதலில் ஈடுபட்ட அனைவரும் தப்பியுள்ளனர். 

இதனிடையே சிவாஜி நகரில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட லீலாவதி தேவி  சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார். இச்சம்பவம் தொடர்பாக கொலை வழக்குப்பதிவு செய்த போலீசார் தோழியின் தாயார் உள்பட குடும்பத்தினர் 3 பேரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.