சொந்த அக்கா மகளை 9 ஆண்டுகளாக சீரழித்த தாய்மாமன் - நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
சிறுமி என்று பார்க்காமல் தாய்மாமா ஒருவர் அக்கா மகளை 9 ஆண்டுகளாக வைத்து சீரழித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பாலியல் தொல்லை
கேரள மாநிலம், காசர்கோடு பகுதியை சேர்ந்த 10-ம் வகுப்பு மாணவி ஒருவர் தனது தாயாருடன் தனியாக வாழ்ந்து வந்துள்ளார். இவரது தந்தை இருவரையும் விட்டு பிரிந்து சென்றுள்ளார், அதனால் மஞ்சேஸ்வரத்தை இவர்களது தாய் வழி மாமா வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார்.
இவர் அடிக்கடி இவர்களது வீட்டிற்கு வந்து சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். மேலும், அவர் 1ம் வகுப்பு படித்தது முதல் 8ம் வகுப்பு வரை இவர் பலமுறை பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. இது குறித்து அந்த சிறுமி சட்டப்பணிகள் ஆணையத்தை நேரடியாக தொடர்பு கொண்டு புகார் அளித்தார்.
நீதிமன்றன் உத்தரவு
இந்நிலையில், மஞ்சேஸ்வர் போலீசார் விசாரணை நடத்தினர், அப்பொழுது அந்த சிறுமியின் தாய்மாமன் 9 ஆண்டுகளாக பாலியல் தொல்லை கொடுத்துள்ளது தெரியவந்தது. இதனையடுத்து, சிறுமி என்றும் பாராமல், 6 வயது முதல் 13 வயது வரை 9 ஆண்டுகளாக சிறுமியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட மாணவியின் தாய்மாமன் மீது கற்பழிப்பு, ஆணாதிக்கம், 12 வயதுக்குட்பட்ட குழந்தையை மீண்டும் மீண்டும் பாலியல் வன்கொடுமை செய்தது, போக்சோ உள்ளிட்ட 9 சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.
மேலும், நீதிமன்றத்தில் நீதிபதி மனோஜ், மாணவியின் தாய்மாமாவுக்கு மொத்தம் 97 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ. 8.5 லட்சம் அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார். தண்டனை காலத்தை ஒரே நேரத்தில் அனுபவிக்க நீதிபதி உத்தரவிட்டது மட்டுமின்றி, அபராத தொகையை, பாதிக்கப்பட்ட சிறுமிக்கு வழங்க நீதிபதி உத்தரவிட்டார்.