குக்கரை வைத்து ஓட்டுக் கேட்ட வேட்பாளர்: கடைசியில் இப்படி பண்ணிட்டாரே- தொண்டர்கள் புலம்பல்
சாத்தூர் தொகுதியில் அதிமுகவுக்காக வாக்கு கேட்டு பிரச்சாரம் செய்த அமமுக வேட்பாளர் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளார். சாத்தூர் சட்டமன்ற தொகுதி எம்.எல்.ஏ வாக இருப்பவர் ராஜவர்மன். இதே தொகுதியில் மீண்டும் போட்டியிட அ.தி.மு.கவில் அவருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. இதனால், ஒரே இரவில் கட்சி மாறிய அவருக்கு அ.ம. மு.க வில் அதே தொகுதியில் சீட் வழங்கப்பட்டது.
அ.தி.மு.கவில் தனக்கு சீட் கிடைக்காதற்கு அமைச்சர் ராஜேந்திர பாலாஜிதான் காரணமென்று கருதி அவரை கடுமையாக சாடி வருகிறார். சாத்தூர் சட்டமன்ற தொகுதியில் தற்போது, பிரசாரத்தில் ஈடுபட்டு வரும் ராஜவர்மன், 2021 ல் முதல்வர் எடப்பாடியை மக்கள் ஆட்சியில் இருந்து அகற்றுவார்கள் என்று கடுமையாக சாடினார்.
இந்த நிலையில் சாத்தூர் தொகுதியில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் போட்டியிட்ட ராஜவர்மன் வாக்கு செகரிப்பில் ஈடுபட்டார். அப்போது பழக்கதோஷத்தில் தந்து முன்னாள் கட்சியான அதிமுகவின் இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்து தன்னை வெற்றிபெற வைக்குமாறு ராஜவர்மன் பேசியது மக்களிடையே சிரிப்பு அலையை ஏற்படுத்தியது.
பிறகு பேச்சை மாற்றி குக்கருக்கு வாக்களிக்குமாறு பேச்சை முடித்துக்கொண்டு அனிருந்து கிளம்பி சென்றார்.