பத்திரமாக வண்டி ஓட்ட சொன்னது குற்றமா? கத்தியால் குத்திக் கொலை - நபர் வெறிச்செயல்!
பத்திரமாக வண்டி ஓட்ட சொன்ன நபரை கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது.
கொலை
டெல்லியின் பிரதாப் நகரை சேர்ந்தவர் அங்கூர்(22). இவர் கடந்த வாரம் இரவு தசரா விழாவுக்கு சென்றுவிட்டு தனது சகோதரன் ஹிமான்சுவுடன் வீடு திரும்பிக்கொண்டிருந்தார்.

அப்போது சபோலி சாலை அருகே வந்தபோது அந்த வழியாக பைக்கில் இரண்டு பேரை பின்னால் ஏற்றிக்கொண்டு வந்த பைக் ஓட்டுநரை பார்த்து பத்திரமாக ஓட்டிச் செல்லுமாறு கூறியுள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த அவர்களில் ஒருவன் ஹிமான்சுவையும், அங்கூரையும் தான் வைத்திருந்த கத்தியால் பலமாக தாக்கியுள்ளனர். அதன்பிறகு அந்த மூவரும் அங்கிருந்து தப்பி ஓடியுள்ளனர்.
வெறிச்செயல்
இந்த தாக்குதலில் ஹிமான்சுவுக்கு கழுத்திலும், தொடையிலும் காயம் ஏற்பட்டுள்ளது. அங்கூரின் நிலை அதைவிட மோசமான நிலையில் அங்கிருந்து அருகிலிருந்த மருத்துவமனைக்கு அங்கூரை ஹிமான்சு அழைத்துச் சென்றார்.

ஆனால் அவர் ஏற்கனவே உயிரிழந்ததாக மருத்துவர்கள் அறிவித்தனர். இந்த நிலையில், உயிரிழந்த அங்கூரின் மார்பு, வயிறு மற்றும் தொடையில் காயங்கள் ஏற்பட்டுள்ளதாக தெரியவந்தது.
இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் சிசிடிவி காட்சிகள் மூலம் அந்த மூவரின் ஒருவனை கைது செய்தனர். ஹிமான்சுவுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
திரைமறைவில் நடந்த டீல் - திமுக ஆதரவோடு முதல்வராக எடப்பாடி - அம்பலப்படுத்திய சி.வி.சண்முகம் IBC Tamil
குரு-சுக்கிரன் உருவாக்கும் கஜலட்சுமி ராஜ யோகம் : இந்த ராசிகளுக்கு அதிர்ஷ்ட கதவு திறக்கப்போகுது! Manithan