ஓணான் மது.. கடகடவென குடித்த தொழிலாளிக்கு நேர்ந்த விபரீதம் - அதிர்ச்சி சம்பவம்!

Tamil nadu Cuddalore
By Swetha Oct 09, 2024 08:30 AM GMT
Report

ஓணான் செத்து கிடந்த மதுவை குடித்த தொழிலாளிக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டுள்ளது.

ஓணான் மது.. 

கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே உள்ள கீழ்ஆதனூர் கிராமத்தை சேர்ந்தவர் தொழிலாளி கொளஞ்சிநாதன். இவர் டாஸ்மாக் கடையில் மதுபாட்டில் வாங்கினார். பின்னர் அவர் பாட்டில் மூடியை திறந்து கடகடவென மதுவை குடித்தார்.

ஓணான் மது.. கடகடவென குடித்த தொழிலாளிக்கு நேர்ந்த விபரீதம் - அதிர்ச்சி சம்பவம்! | Man Got Hospitalized After Drinking Liquor

பின்னர் மீதமுள்ள மதுவையும் அருந்த முயன்றார். அப்போது அந்த பாட்டிலில் ஓணான் செத்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். அடுத்த சில நிமிடங்களில் கொளஞ்சிநாதனுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டுள்ளது.

30 வருஷங்களாக மது, புகையிலைக்கு தடை விதித்த கிராமம் - ஆச்சர்ய தகவல்

30 வருஷங்களாக மது, புகையிலைக்கு தடை விதித்த கிராமம் - ஆச்சர்ய தகவல்

விபரீதம் 

உடனே அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் மேல் சிகிச்சைக்காக கொளஞ்சிநாதன்,

ஓணான் மது.. கடகடவென குடித்த தொழிலாளிக்கு நேர்ந்த விபரீதம் - அதிர்ச்சி சம்பவம்! | Man Got Hospitalized After Drinking Liquor

அரியலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள். இந்த விவகாரம் குறித்து அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.