இட்லி மாவில் விஷம் கலந்த கொடூரம் - விசாரணையில் அடுத்தடுத்து வெளியான பகீர் தகவல்!

Tamil nadu Cuddalore Crime
By Vidhya Senthil Dec 19, 2024 09:30 AM GMT
Vidhya Senthil

Vidhya Senthil

in குற்றம்
Report

இட்லி மாவில் விஷம் கலந்து கொடுத்தவருக்கு ஏழு ஆண்டு சிறை விதிக்கப்பட்டுள்ளது.

கடலூர் 

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவிலைச் சேர்ந்த சுந்தரம் என்பவர் டிபன் மற்றும் டீக்கடை ஒன்றை நடத்தி வந்துள்ளார். இவரது அருகிலேயே வெங்கடேசன் என்பவரும் டீ மற்றும் டிபன் கடை நடத்தி வந்துள்ளார். ஆனால் இவரது கடையில் வியாபாரம் குறைவாக இருந்துள்ளது. அதேசமயம் சுந்தரம் கடையில் வியாபாரம் நன்றாக இருந்ததாகக் கூறப்படுகிறது.

இட்லி மாவில் விஷம் கலந்த கொடூரம்

இந்நிலையில் கடந்த 2017 ஆம் ஆண்டு சுந்தரம் கடைக்குச் சென்ற வெங்கடேசன் இட்லி மாவில் யாருக்கும் தெரியாமல் எலிமருந்தைக் கலந்துள்ளார். இதனையடுத்து, இட்லி மாவில் ஏதோ வாசனை வரவே சந்தேகம் அடைந்த சுந்தரம் ஆய்வு செய்துள்ளார். அப்போது மாவில் எலிமருந்தை கலந்திருப்பது தெரியவந்தது.

கழிவறையில் சடலமாக கிடந்த பச்சிளம் குழந்தை -விசாரணையில் வெளிவந்த பகீர் உண்மை!

கழிவறையில் சடலமாக கிடந்த பச்சிளம் குழந்தை -விசாரணையில் வெளிவந்த பகீர் உண்மை!

  இட்லி மாவு 

உடனடியாக இந்த சம்பவம் குறித்து காட்டுமன்னார்கோவில் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து வெங்கடேசனைக் கைது செய்தனர். இந்த வழக்கு சிதம்பரம் சார்பு நீதிமன்றத்தில் கடந்த 7 ஆண்டுகளாக நடைபெற்று வந்தது.

இட்லி மாவில் விஷம் கலந்த கொடூரம்

இந்த சூழலில் கடந்த புதன்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது விசாரித்த நீதிபதி கடைக்குள் அத்துமீறி நுழைந்திற்காக வெங்கடேசனுக்கு ஓராண்டு சிறைத் தண்டனையும் , ரூ1000 அபராதம் விதித்தார். மேலும் மாவில் விஷம் கலந்ததற்காக 7 ஆண்டு சிறைத் தண்டனை விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.