தம்பி மனைவியை 3 துண்டாக வெட்டி கொலை செய்த அண்ணன்- திடுக்கிடும் பின்னணி என்ன?
தம்பி மனைவியை அண்ணனே 3 துண்டாக வெட்டி கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
தம்பி மனைவி
மேற்கு வங்க மாநிலத்தில் டோலிகஞ்ச் என்ற பகுதியில் கடந்த 13ஆம் தேதி பெண்ணின் தலை துண்டிக்கப்பட்ட நிலையில் சடலம் கிடந்துள்ளது. அந்த வழியாக வந்தவர்கள் இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக காவல் நிலையத்திற்குத் தகவல் தெரிவித்தனர்.
தகவலின் பேரில் விரைந்து வந்த காவலர்கள் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், அந்த பெண்ணின் உடல் பாகங்கள் அப்பகுதியில் உள்ள ஒரு குளத்தில் கண்டெடுக்கப்பட்டது. இதனையடுத்து இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்த காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.
மேலும் அந்த பகுதியில் உள்ள சிசிடிவி கேமிராவை பறிமுதல் செய்து ஆய்வு செய்தனர். அதில், அடையாளம் தெரியாத நபர் ஒருவர் பையை வீசி சென்றது தெரியவந்தது. தொடர்ந்து விசாரணை நடத்தியதில், பர்கானாஸ் மாவட்டத்தில் உள்ள பகல் தங்கா கிராமத்தைச் சேர்ந்த அட்டியூர் ரஹ்மான் லஸ்கர்(35) என்பது தெரியவந்தது.
வெட்டி கொலை
இதனையடுத்து அட்டியூர் ரஹ்மான் லஸ்கர் கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். அதில், பல திடுக்கிடும் தகவல் வெளியானது. கொலை செய்யப்பட்ட அந்த பெண், அட்டியூர் ரஹ்மானின் தம்பி மனைவி ஆகும். கருத்து வேறுபாடு காரணமாகத் தனியாகப் பிரிந்து தனியாக வாழ்ந்துள்ளார்.
அப்போது அட்டியூர் ரஹ்மான் லஸ்கர் தன்னை ஏற்றுக் கொள்ளும்படி வற்புறுத்தியுள்ளார். ஆனால் இந்த பெண் ஏற்க மறுத்ததாகத் தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த அட்டியூர் ரஹ்மான் லஸ்கர் அந்த பெண்ணின் உடலை 3 துண்டாக வெட்டி பல்வேறு இடங்களில் வீசியது காவல் துறை விசாரணையில் தெரியவந்தது.