ரயில் நிலையத்தில் இறந்து கிடந்த நபர்.. கண்டுகொள்ளாமல் தாண்டி சென்ற மக்கள் - அவல நிலை!
ஒருவர் ரயில் நிலையத்தில் சடலமாக கிடந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ரயில் நிலையம்
செங்கல்பட்டு ரயில் நிலையத்தில் உள்ள முன்பதிவு பயணச்சீட்டு வழங்கும் பகுதியில் அருகே அடையாளம் தெரியாத நபர் ஒருவர் இறந்து கிடந்துள்ளார். அவர் தூங்கி கொண்டிருப்பதாக பொதுமக்கள் பலர் நினைத்து அவரை பார்த்தும் பார்க்காமல் தாண்டி சென்றனர்.
பொதுமக்கள் பிசியாக அவரவர் வேலையை பார்த்துக்கொண்டிருந்தனர். ஆனால் ஒருவர் அவர் அருகில் போய் பார்த்த போது தான் இறந்து கிடந்தது தெரியவந்தது. இது குறித்து ரயில்வே அதிகாரிகள் மற்றும் காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர்.
அலட்சியம்
இந்நிலையில், ரயில்வே போலீஸ் மற்றும் செங்கல்பட்டு நகர காவல்துறைக்கு தகவல் அளித்தும் 5 மணிநேரமாக சடலம் மீட்கப்படாமல் அதே இடத்தில் இருந்துள்ளது. மேலும், ரயில்வே மற்றும் நகர காவல்துறைக்கு இடையே உள்ள எல்லைப் பிரச்னை காரணமாக சடலத்தை மீட்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியானது.
ஆனால் இவர் உயிர்பிரிந்ததை அறியாத பல பயணிகள் டிக்கெட் வாங்குவதற்கு வரிசையில் நின்று வாங்கும் புகைப்படம் டுவிட்டரில் வெளியாகி வைரலாகி வருகிறது.