Kit Kat சாக்லேட் கவரில் ‘வருங்கால பிரதமர்’ என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை வரைந்த ஓவியர்
கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூர், சிவனார்தாங்கல் கிராமத்திலுள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் பகுதிநேர ஓவிய ஆசிரியர் சு. செல்வம் என்பவர், பிரஷ்க்கு பதில் Kit Kat சாக்லேட் கவரைக் கொண்டு ‘வருங்கால பிரதமர்’ என்று குறிப்பிட்டு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் படத்தை வரைந்து அசத்தியுள்ளார்.
தற்போது இப்படம் சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
இது குறித்து ஓவிய ஆசிரியர் செல்வம் கூறியதாவது -
தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் அரபு நாட்டு பயணம் மேற்கொண்டுள்ளார். பயணத்தை பார்க்கும்போது, கேட்கும்போதும், பேசும்போதும் இனிமையாக இருக்கிறது.
அதனால் தான் பிரஷ்க்கு பதிலாக தித்திக்கும் சாக்லேட்டாலேயே ‘வருங்கால பிரதமர்’ என்று தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் வரைந்துள்ளேன்.
அடுத்த ‘இந்திய பிரதமராக வர வேண்டும் என்பதை விரும்பும் விதமாக அவருடைய படத்தை 20 நிமிடங்களில் வரைந்தேன் என்றார்.
ஊர் பொதுமக்கள் சாக்லேட் கொண்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் படத்தை வரைந்த பகுதிநேர ஓவிய ஆசிரியர் செல்வத்திற்கு பாராட்டுக்கள் தெரிவித்து வருகின்றனர்.
இதோ அந்த புகைப்படம் -