அண்ணியுடன் ஏற்பட்ட காதல்...ரயில் ஏறி "ஜூட்" விட்ட கொளுந்தன்..மனைவிக்கு வெச்ச ட்விஸ்ட்!!

Tamil nadu Chennai
By Karthick Oct 10, 2023 12:31 PM GMT
Report

தகாத உறவின் காரணமாக அண்ணியுடன் தலைமறைவான தனது கணவன் குழந்தையை கடத்தி சென்றதாக மனைவி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

மணிகண்டன் நந்தினி தம்பதி

சென்னையை அடுத்த திருவள்ளூர் மாவட்டத்தின் திருமுல்லைவாயில் உப்பரபாளையம் பகுதியில் வசித்து வந்தவர் மணிகண்டன். கொல்கத்தா மாநிலத்தில் இருந்த தனது உறவினர் நந்தினியை வரவழைத்து உறவினர்கள் மணிகண்டனுக்கு திருமணம் செய்து வைத்துள்ளனர்.

man-flees-with-sister-in-law-with-child-in-chennai

மணிகண்டன் - நந்தினி தம்பதிக்கு திருமணமாகி 8 வருடங்கள் ஆன நிலையில், இரண்டு குழந்தைகள் உள்ளனர். நான்கு நாட்களுக்கு முன்பு, வேலைக்கு சென்று விட்டு வீட்டிற்கு திரும்பிய நந்தினி தனது 2 வயது குழந்தை காணாமல் போயிருந்ததை கண்டு, மூத்த மகளிடம் அது குறித்து கேட்டுள்ளார்.

அப்போது மூத்த மகள் அப்பா கடைக்கு சென்ற போது அவளையும் கூட்டிச் சென்றுள்ளதாக கூறியிருக்கின்றார். ஆனால் நீண்ட நேரமாகியும் கணவனும், குழந்தையும் வீடு திரும்பாத நிலையில், பதற்றமான நந்தினி அக்கம் பக்கம் தேடியுள்ளார்.

சிறையில் இருந்து வெளிவந்த கணவர் ரவீந்தர்...ஒரே போஸ்ட்டால் உருக வைத்த மகாலக்ஷ்மி

சிறையில் இருந்து வெளிவந்த கணவர் ரவீந்தர்...ஒரே போஸ்ட்டால் உருக வைத்த மகாலக்ஷ்மி

அண்ணியுடன் ஏற்பட்ட பழக்கம்

கணவருக்கு போன் செய்து பார்த்த போது, செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக மேலும் பதற்றமான நந்தினி மணியின் சொந்த ஊரான வடலூரில் வசிக்கும் அவரது குடும்பத்தினரிடம் அழைத்து பேசியுள்ளார். அப்போது தான், ஊரில் உள்ள மணிகண்டனின் அண்ணன் மனைவியான விஜியும் காணாமல் போயிருந்தது தெரியவந்துள்ளதுவிஷயம் சற்று வினோதமாக இருந்து நிலையில், பிறகு தான் விஷயம் தெரியவந்துள்ளது.

man-flees-with-sister-in-law-with-child-in-chennai

அடிக்கடி ஊருக்கு சென்று வந்த மணிகண்டனுக்கு விஜிக்கும் நெருங்கிய பழக்கம் ஏற்பட அது காலப்போக்கில் தகாத உறவாக மாறியுள்ளது. அதனை தொடர்ந்து ஒருகட்டத்தில் இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்த நிலையில், தான் இந்த சம்வபம் நிறைவேறியுள்ளது.

ஊரை விட்டு வேறொரு இடத்திற்க்கு சென்று வாழ நினைத்த மணிகண்டன் - விஜி இருவரும் செல்லும் போது, மணிகண்டனின் இளைய மகளையும் தூக்கி சென்றுள்ளனர். இந்த விஷயங்களை அறிந்து கொண்ட நந்தினி. கணவனையும், குழந்தையையும் மீட்டு தரக்கோரி ஆவடி காவல் நிலையத்தில் புகாரளித்துள்ளார்.