தூங்கினது தப்பா? ஊழியருக்கு ரூ.40 லட்சம் இழப்பீடு - நீதிமன்றம் உத்தரவு!
தூங்கியதற்காக ஊழியர் ஒருவர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
தூங்கிய ஊழியர்
ஜியாங்சு மாகாணத்தில் தைக்ஸிங்கில் என்ற ரசாயன நிறுவனம் ஒன்று இயங்கி வருகிறது. இங்கு ஜாங் என்ற நபர் 20 வருடங்களாக பணிபுரிந்து வருகிறார்.
இந்நிலையில், வேலை செய்து கொண்டிருக்கும் போதே ஒரு மணி நேரம் தூங்கியதற்காக ஜாங் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். முதல் நாள் நள்ளிரவு வரை பணிபுரிந்த காரணத்தினால் மறுநாள் ஒரு மணி நேரம் தூங்கியதாக தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து 2 வாரங்களுக்கு பிறகு நிறுவன தரப்பில் ஒரு அறிக்கை வெளியிடப்பட்டது. அதில், ஜாங் நிறுவனத்தின் ஜீரோ டாலரன்ஸ் பாலிசியை மீறுவிட்டார். வற்றை மீறுபவர்களை நிறுவனங்கள் பணி நீக்கம் செய்வது வழக்கம் எனக் குறிப்பிடப்பட்டிருந்தது. இதனை ஏற்காத ஜாங் நீதிமன்றத்தை அனுகியுள்ளார்.
நிறுவன இழப்பீடு
அங்கு இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜூ க்யூ, ஒரு வேலை நிறுவனத்தில் பணிபுரிபவர்கள் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தினாலோ அல்லது முதலாளிக்குப் பெரும் இழப்பை ஏற்படுத்தினாலோ பணி நீக்கம் செய்யப்படலாம். ஆனால் வேலையின் போது உறங்கியது அவ்வளவு பெரிய தவறில்லை.
இதனால் நிறுவனத்திற்கு பெரிய பாதிப்பு ஏற்படவில்லை. தூங்கியதற்காக பணிநீக்கம் செய்வது நியாயமற்றது என தீர்ப்பளித்து, நிறுவனத்திடம் இழப்பீடாக ஜாங்கிற்க்கு 3,50,000 யுவான் ( இந்திய மதிப்புக்கு சுமார் ரூ.40 லட்சம் )வழங்க உத்தரவிட்டுள்ளார்.