1994-இல் தாத்தா வாங்கிய SBI பங்கு - 750 மடங்கு அதிகரித்து பேரனுக்கு அடித்த ஜாக்பாட் - இப்போதைய மதிப்பு தெரியுமா..?

India
By Karthick Apr 03, 2024 05:24 AM GMT
Report

Share market பங்குகளில் பெரும் பணத்தை பெற்று பணக்காரர்கள் ஆனவர்கள் பலரின் கதைகளை நாம் கண்டுளோம்.

SBI பங்கு

அப்படி 30 ஆண்டுகளுக்கு முன்பு தாத்தா வாங்கிய பங்கு தற்போது பேரனுக்கு ஜாக்பாட்டாக அமைந்துள்ளது. சண்டிகரை சேர்ந்த மருத்துவர் ஒருவர் அவருடைய தாத்தாவின் பழைய முதலீடுகளால் பெரும் இன்ப அதிர்ச்சியடைந்துள்ளார்.

man-finds-grandfathers-shares-worth-bought-in-1994

குழந்தை அறுவை சிகிச்சை நிபுணரான டாக்டர் தன்மய் மோதிவாலா, வீட்டில் பழைய பத்திரங்களை சரிசெய்து கொண்டிருந்த போது, ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியாவிடமிருந்து பங்குச் சான்றிதழ்களைக் கண்டுபிடித்துள்ளார். ​​

750 மடங்கு

1994 ஆம் ஆண்டு அவரின் தாத்தா ₹500 மதிப்புள்ள SBI பங்குகளை வாங்கியிருப்பதை அவர் கண்டுபிடித்தார். இருப்பினும், அவருடைய தாத்தா அவற்றை விற்காமல் அதனை மறந்தும் இருக்கின்றார். 

யாரு சாமி நீ..? 26 வருடங்கள் - ஒரே நாள் தான் லீவ் - அந்த லீவ் எதுக்கு'னு தெரியுமா..?

யாரு சாமி நீ..? 26 வருடங்கள் - ஒரே நாள் தான் லீவ் - அந்த லீவ் எதுக்கு'னு தெரியுமா..?

அப்போது 500 ரூபாய்க்கு வாங்கப்பட்ட பங்கு தற்போது மூன்று தசாப்தங்களில் பிறகு அவருக்கு 750 மடங்கு வருமானத்தை அளித்துள்ளது.

man-finds-grandfathers-shares-worth-bought-in-1994

அதாவது அவரின் SBI பங்குகள் இப்போது ₹3.75 லட்சம் மதிப்புள்ளதாக மருத்துவர் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் சமூகவலைத்தளத்தில் பதிவிட்டு தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.