போதையில் விமான இருக்கையில் சிறுநீர் கழித்த பயணி - நீதிமன்றம் அதிரடி!
நபர் ஒருவர் போதையில் விமானத்தில் இருக்கையில் அமர்ந்துகொண்டு சிறுநீர் கழித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விமான ரகளை
இந்தோனேசியா, பாலி பகுதியில் இருந்து ஆஸ்திரேலியா பிரிஸ்பேன் நகருக்கு விமானம் ஒன்று பறந்தது. அதில் நியூசிலாந்தைச் சேர்ந்த ஜேம்ஸ் ஹூக்ஸ்(72) என்பவர் பயணம் செய்தார். இந்த விமானப் பயணம் சுமார் 6 மணிநேரம்.

இதனால் அந்த பயணி 6 சிறிய பாட்டில்கள் மதுவை அருந்தியுள்ளார். இந்நிலையில், மதுபோதையில் இருந்த அவர் திடீரென தான் அமர்ந்திருந்த சீட்டில் இருந்தே சிறுநீர் கழித்துள்ளார். இதனால் சக பயணிகளும், விமான ஊழியர்களும் அதிர்ச்சியடைந்தனர்.
நீதிமன்றம் அதிரடி
தொடர்ந்து, விமானம் பிரிஸ்பேன்னில் தரையிறங்கியதும், போலீஸாருக்கு தகவல் அளிக்கப்பட்டது. அவர் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். மேலும், பொதுமக்களுக்கு தொல்லை தருதல், சமூக விரோத செயல்களில் ஈடுபடுதல் போன்ற குற்றங்களின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
தனது குற்றத்தை அவர் ஒப்புக்கொண்டதையடுத்து, ஓராண்டு நன்னடத்தை தண்டனை வழங்கப்பட்டது.
மேலும், பயணிகளின் இதுபோன்ற அத்துமீறல்களை ஆஸ்திரேலியா ஒருபோதும் ஏற்காது, மது அருந்திய பயணிகள் தங்களின் செயலுக்கு முழு பொறுப்பை அவர்கள்தான் ஏற்க வேண்டும் என பிரிஸ்பேன் காவல் ஆணையர் தெரிவித்துள்ளார்.