நீதான் எல்லாதுக்கும் காரணம்.. வங்கியில் நுழைந்து ஊழியரை வெட்டிய நபர் - ஷாக் சம்பவம்!

Tamil nadu Attempted Murder Chennai Crime
By Swetha Dec 20, 2024 03:48 AM GMT
Report

 வங்கி அதிகாரியை மர்ம நபர் அறிவாளால் வெட்டியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வங்கி 

சென்னை தி.நகர் பர்க்கித் சாலையில் HDFC வங்கி கிளை ஒன்று இயங்கி வருகிறது. இங்கு வங்கிகுள் புகுந்த மர்ம நபர் ஒருவர் வங்கியின் வர்த்தக மற்றும் அந்நிய செலவாணி பிரிவின் மேலாளரான தினேஷ் என்பவரிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுப்பட்டார்.

நீதான் எல்லாதுக்கும் காரணம்.. வங்கியில் நுழைந்து ஊழியரை வெட்டிய நபர் - ஷாக் சம்பவம்! | Man Enters Bank And Stabs Employee With Knife

அப்போது திடீரென தான் மறைத்து வைத்திருந்த அறிவாளை எடுத்து "உன்னால தாண்டா என் வாழ்க்கை வீணாப் போச்சு" எனக் கூறி அழுதபடியே தினேஷின் காது மற்றும் முதுகு ஆகிய இடங்களில் வெட்டினார். இதில் தினேஷ் ரத்த வெள்ளத்தில் கூக்குரலிட்டு அழுத்துள்ளார்.

இந்த சம்பவத்தை பார்த்து அதிர்ச்சி அடைந்த வங்கி ஊழியர்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் தாக்கிய மர்ம நபரை பிடித்து போலீசாருக்கு புகார் அளித்தனர். அதன் பேரில்சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் கத்தியால் வெட்டிய மர்ம நபரை காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர்.

இதனிடையே வெட்டுபட்ட வங்கி அதிகாரி தினேஷை சிகிச்சைகாக மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இந்த நிலையில், கைது செய்யப்பட்ட நபரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், வெட்டுபட்ட வங்கி அதிகாரி தினேஷ் சென்னை கொளத்தூர் அடுத்த பொன்னியம்மன்மேடு பகுதியைச் சேர்ந்தவர் என்பதும்,

பெண்கள் உள்ளாடையுடன் உல்லாசம்.. பட்டப்பகலில் மர்ம நபர் செய்த கொடூரம்- அதிர்ச்சி Video!

பெண்கள் உள்ளாடையுடன் உல்லாசம்.. பட்டப்பகலில் மர்ம நபர் செய்த கொடூரம்- அதிர்ச்சி Video!

 வெட்டிய நபர்

வங்கி அதிகாரியை வெட்டிய நபர் புதுக்கோட்டை மாவட்டம் மணல்மேல்குடி சேர்ந்த சதீஷ் (34) என்பதும் தெரியவந்தது. தொடர் விசாரணையில், வங்கி அதிகாரி தினேஷ் என்பவரும், தாக்கிய சதீஷ் என்பவரும் நந்தனம் பகுதியில் உள்ள தனியார் வங்கியில் ஒன்றாக பணிபுரிந்து வந்துள்ளனர்.

நீதான் எல்லாதுக்கும் காரணம்.. வங்கியில் நுழைந்து ஊழியரை வெட்டிய நபர் - ஷாக் சம்பவம்! | Man Enters Bank And Stabs Employee With Knife

அப்போது நன்னடத்தை விதிமீறல் காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு சதீஷை வங்கி நிர்வாகம் பணி நீக்கம் செய்துள்ளது தெரியவந்தது. இதற்கு காரணம் தினேஷ்தான் என சதீஷ் நினைத்து அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்ததாகவும் கூறப்படுகிறது.

மேலும், சதீஷ் காவல் நிலையம், முதல்வர் தனிப்பிரிவு ஆகியவற்றில் தினேஷ் மீது புகார் அளித்துள்ளதும் இந்த புகாரின் அடிப்படையில் போலீசார் தினேஷ் மற்றும் சதீஷ் ஆகியோரை வரவழைத்து விசாரணை நடத்தியதும் தெரியவந்தது.

இந்த சூழலில், தன்னை வேலையில் இருந்து நீக்கியதற்கு தினேஷ் மட்டும்தான் காரணம் என அவர் மீது சதீஷ் பகையோடு சுற்றி வந்துள்ளார். எங்கேயும் வேலைகிடைக்காததால், தன்னுடைய இந்த நிலைமைக்கு காரணமாக நினைத்த தினேஷை பழிவாங்குவதற்காக

பல தினங்களாக தேடி வந்து தாக்கியதாக தெரியவந்துள்ளது. இதனையடுத்து சிசிடிவி காட்சிகளை கைப்பற்றிய போலீசார், கைது செய்யப்பட்ட சதீஷிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.