11 பீர் குடித்துவிட்டு இருக்கையில் சிறுநீர் கழித்த இளைஞர் - விமானத்தில் அட்டூழியம்!

United States of America Flight
By Sumathi Oct 23, 2025 05:54 PM GMT
Report

விமானத்தில் இளைஞர் அநாகரிகமாக நடந்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஐஐடி பட்டதாரி

அமெரிக்காவில் ஆண்டுக்கு ரூ. 4 கோடிக்கும் மேல் சம்பாதிக்கும் ஒரு ஐஐடி பட்டதாரி இளைஞர், விமானத்தில் பயணித்தார்.

11 பீர் குடித்துவிட்டு இருக்கையில் சிறுநீர் கழித்த இளைஞர் - விமானத்தில் அட்டூழியம்! | Man Drunk On 11 Beers Urinates In Flight

16 மணி நேர விமானப் பயணத்தில் 11 பீர் பாட்டில்கள் குடித்துவிட்டு அட்ராசிட்டில் ஈடுப்பட்டுள்ளார். இதுகுறித்து அவருடன் பயணித்த கெளரவ் கேதர்பால் என்பவர் சமூக வலைதளத்தில்,

4 பேர்.. 4 நிமிடம்; ரூ.900 கோடி நகைகள் மாயம் - அதிரவைத்த சம்பவம்!

4 பேர்.. 4 நிமிடம்; ரூ.900 கோடி நகைகள் மாயம் - அதிரவைத்த சம்பவம்!

அநாகரிக செயல்

விமான பணிப்பெண் மூன்று பாட்டில்களுக்கு மேல் கொடுக்க மறுக்கவே, அந்த இளைஞர் நண்பர்கள் மூலம் கூடுதல் பீர் வாங்கி அளவுக்கு அதிகமாக அருந்தியுள்ளார்.

11 பீர் குடித்துவிட்டு இருக்கையில் சிறுநீர் கழித்த இளைஞர் - விமானத்தில் அட்டூழியம்! | Man Drunk On 11 Beers Urinates In Flight

மதுபோதையில் அவரால் இருக்கையிலிருந்து எழ முடியாமல் இருக்கையிலேயே சிறுநீர் கழித்து விட்டார். துர்நாற்றம் காரணமாக அருகில் இருந்தவர்கள் வேறு இருக்கைக்கு மாற வேண்டியிருந்தது என குறிப்பிட்டுள்ளார். இந்த பதிவு வைரலாகி கண்டனங்களை பெற்று வருகிறது.

கெளரவும் தனது பங்கு பீரை அந்த இளைஞருக்கு கொடுத்திருந்தார். எனவே அவரையும் சிலர் திட்டி வருகின்றனர். முன்னதாக கடந்த 2023-ல் ஒரு பயணி சக பெண் மீது சிறுநீர் கழித்த சம்பவம் அரங்கேறியது குறிப்பிடத்தக்கது.