online-ல் வாங்கிய ரூ. 300 டி-சர்ட்.. நண்பனை கழுத்தறுத்து கொலை செய்த கொடூரம்- நடந்தது என்ன?

Maharashtra Crime Murder
By Vidhya Senthil Feb 04, 2025 10:30 AM GMT
Vidhya Senthil

Vidhya Senthil

in குற்றம்
Report

ஆன்லைனில் வாங்கிய ரூ. 300 டி-சர்ட்டிற்காக இளைஞரை கழுத்தறுத்து கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

  மகாராஷ்டிரா

மகாராஷ்டிரம் மாநிலம் நாக்பூர் மாவட்டத்தில் உள்ள சாந்தி நகர் பகுதியில் வசித்து வருபவர் அக்‌ஷய் . இவர் கடந்த சில தினங்களுக்கு முன் ஆன்லைன் ஆப் மூலம் ஆர்டர் செய்து ரூ. 300 டி-சர்ட் ஒன்றை வாங்கியுள்ளார்.

online-ல் வாங்கிய ரூ. 300 டி-சர்ட்.. நண்பனை கழுத்தறுத்து கொலை செய்த கொடூரம்- நடந்தது என்ன? | Man Drunk Friends Killed Dispute T Shirt

ஆனால் அந்த ஆடை தனக்கு பொருந்தாததால் தனது நண்பர் ஷுபம் என்பரிடம் டி-ஷர்ட்டைக் கொடுத்துள்ளார்.அப்போது அந்த டி-சர்ட்டிற்கு ரூ. 300 கொடுக்கும்படி ஷுபமிடம் அக்‌ஷய் கேட்டுள்ளார். ஆனால் இதற்கு ஷுபம் மறுத்துள்ளார்.

சூட்கேஸில் எரிந்த நிலையில் கிடந்த பெண் சடலம் - நடுங்க வைத்த பகீர் பின்னணி!

சூட்கேஸில் எரிந்த நிலையில் கிடந்த பெண் சடலம் - நடுங்க வைத்த பகீர் பின்னணி!

இதனால் சம்பவத்தன்று அக்‌ஷய் மற்றும் சுபம்மிற்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.வாக்குவாதம் ஒருகட்டத்தில் முற்றியதால், ஷுபம், அக்‌ஷய் மற்றும் அவரது அவரது சகோதரர் கடுமையாக பேசியுள்ளார்.இதனால் ரூ.300 பணத்தை அக்ஷய் மீது சுபம் தூக்கி வீசியுள்ளார்.

 கொலை

இதில் ஆத்திரமடைந்த அக்‌ஷய் மற்றும் அவரது அவரது சகோதரர் பிரயாக் அசோல், சுபம் கழுத்தை அறுத்து, சம்பவ இடத்திலேயே அவரைக் கொலை செய்துள்ளனர்.இந்த சம்பவம், குறித்து தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் சுபம் உடலைப் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

online-ல் வாங்கிய ரூ. 300 டி-சர்ட்.. நண்பனை கழுத்தறுத்து கொலை செய்த கொடூரம்- நடந்தது என்ன? | Man Drunk Friends Killed Dispute T Shirt

இது குறித்து வழக்குப் பதிவு செய்த காவல் துறையினர் அக்‌ஷய் மற்றும் அவரது அவரது சகோதரர் பிரயாக் அசோலை கைது செய்தனர். மேலும் அவர்களிடம் நடத்திய விசாரணையில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் குடிபோதையிலிருந்தது தெரியவந்தது.