தங்கையுடன் குடும்பம் நடத்திய அண்ணன் - 6 ஆண்டுகளுக்குப்பின் தம்பதி அதிர்ச்சி
அண்ணன் தனது தங்கையை திருமணம் செய்து வாழ்ந்து வந்த சம்பவம் அரங்கேறியுள்ளது.
தங்கையுடன் திருமணம்
ரெட்டிட் என்ற தளத்தில் நபர் ஒருவர் அதிர்ச்சி தகவல் ஒன்றைப் பகிர்ந்துள்லார். அதில், இருவருக்குத் திருமணமாகி 6 வருடங்கள் கடந்த நிலையில் இரண்டு குழந்தைகள் உள்ளனர். அவரின் மனைவிக்கு சிறுநீரக கோளாறு ஏற்பட்டதன் காரணத்தினால் சிறுநீரக தானத்திற்கு எதிர்பார்த்துக்கொண்டு இருந்துள்ளனர்.
அதற்காக அவரின் மனைவியின் உறவினர்களுடன் சோதனை செய்து பார்த்தலில் யாருடனும் பொருத்தம் கிடைக்கவில்லை. இறுதியில் கணவரிடம் செய்த சோதனையில் பொருத்தம் மிக அதிகமாக இருந்துள்ளது.
அதிர்ச்சி தகவல்
மருத்துவர்களின் அறிவுரைப்படி மேலும் சில சோதனைகள் நடத்தியதில், அவருக்கும் மனைவிக்கும் டிஎன்ஏ பொருத்தம் கண்டறியப்பட்டுள்ளது. இப்படிதான் அவரின் மனைவி உண்மையில் அவருக்குத் தங்கை என்ற உண்மை தெரியவந்துள்ளது.
இந்த நபர், பிறந்தபோதே தத்துப்பிள்ளையாகக் கொடுக்கப்பட்டவர். அதனால் அவருக்கு எப்படி தங்கை, மனைவியாக வந்தார் என்பது குறித்து ஒன்றும் புரியவில்லை என்று கூறியுள்ளார்.

இந்த தேதியில் பிறந்த பெண்கள் அதிர்ஷ்டசாலிகளாம்.. கணவருக்கு தான் லக்- எண்கணிதம் சொல்வது என்ன? Manithan
