திருமணத்தில் இறந்த அக்கா - அடம்பிடித்து உடனே தங்கையை மணமுடித்த மாப்பிள்ளை

Gujarat Marriage Death
By Sumathi 3 வாரங்கள் முன்

திருமணத்தின் போது அக்கா உயிரிழந்ததால் மாப்பிள்ளை உடனே தங்கையை மணமுடித்துள்ளார்.

திருமணம்

குஜராத்தைச் சேர்ந்தவர் ராணாபாய் புத்தாபாய் அல்கோதர். இவர் தனது மகன் விஷாலுக்கு பெண் தேடி வந்துள்ளார். தொடர்ந்து, பாவ்நகரை சேர்ந்த ஜினாபாய் ரத்தோட் என்பவரது மகள் ஹெட்டலை பார்த்து மகனுக்கு திருமணம் செய்ய பேசியுள்ளனர்.

திருமணத்தில் இறந்த அக்கா - அடம்பிடித்து உடனே தங்கையை மணமுடித்த மாப்பிள்ளை | Groom Marries Bride S Sister After Bride Death

அதனையடுத்து திருமணத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டு பெண் அழைப்பு நடந்துள்ளது. அப்போது, மணமகள் ஹெட்டல் திடீரென மயங்கி விழுந்துள்ளார்.

மணப்பெண் மரணம்

உடனே மருத்துவமனை கொண்டு சென்று பரிசோதித்ததில் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இருப்பினும் மாப்பிள்ளை வீட்டார் திருமணம் நடந்தே தீர வேண்டும் என உறுதியில் இருந்துள்ளனர். எனவே, ஹெட்டலின் தங்கையை மணமுடித்து வைக்க கேட்டுள்ளனர். இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் முறையிட்டுள்ளனர்.  

பின்னர், ஊர் பெரியோர்கள் பேசி திருமணம் செய்து முடிக்க வேண்டும் என்று கூறியுள்ளனர். அதனையடுத்து விஷால் இறந்த பெண்ணின் சகோதரியை திருமணம் செய்துள்ளார். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.   

தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.