கழுத்தில் செயினுடன் MRI ஸ்கேன் எடுக்க சென்ற நபர் கொடூர மரணம் - நடந்தது என்ன?
எம்.ஆர்.ஐ ஸ்கேன் அறையில் கழுத்தில் செயினுடன் நுழைந்த முதியவர் உயிரிழந்துள்ளார்.
எம்.ஆர்.ஐ ஸ்கேன்
நியூயார்க் வெஸ்ட்பரியில், நாசாவ் ஓபன் எம்.ஆர்.ஐ செயல்பட்டு வருகிறது. இங்கு முழங்கால் வலிக்கு சிகிச்சை பெற்றுவரும் அட்ரியன் ஜோன்ஸ் என்பவர் எம்.ஆர்.ஐ ஸ்கேன் மூலம் ஸ்கேன் செய்துள்ளார்.
அப்போது அவர் எழுந்திரிக்க சிரமப் பட்டதால், அவரின் 61 வயது கணவரை உதவிக்காக அழைத்திருக்கிறார். அப்போது அவர் கழுத்தில் இரும்பு செயின் ஒன்றை அணிந்திருந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் அவர் எம்.ஆர்.ஐ ஸ்கேன் அறைக்கு வந்தவுடன் அவர் இயந்திரத்துக்குள் இழுக்கப்பட்டார்.
முதியவர் உயிரிழப்பு
இதில் நிலைகுலைந்துப்போன அவர் உயிரிழந்தார். அங்கிருந்த உதவியாளர்கள் முயன்றும் பலனளிக்கவில்லை. தொடர்ந்து இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய காவல்துறை, ``பாதிக்கப்பட்ட நபர் அனுமதி இன்றி எம்.ஆர்.ஐ அறைக்குள் நுழைந்திருக்கிறார்.
கழுத்தில் ஒரு பெரிய உலோகச் சங்கிலியை அணிந்திருந்தார், இதனால் அவர் இயந்திரத்திற்குள் இழுக்கப்பட்டதால் அவர் உயிரிழந்திருக்கிறார்" என தெரிவித்துள்ளனர்.
மேலும் உயிரிழட்ந்தவரின் மனைவி கூறுகையில், ``நாங்கள் இந்த மருத்துவமனைக்கு வருவது இது முதல்முறையல்ல. என் கணவர் அணிந்திருந்த செயினும் புதியதல்ல. ஊழியர்களுக்கு ஏற்கெனவே இது தெரியும்." என பேசியுள்ளார்.