வெள்ளியங்கிரி மலையேறிய பக்தர் திடீர் மரணம்; 3 மாதத்தில் 9 பேர் உயிரிழப்பு - பரபரப்பு!

Coimbatore Death
By Sumathi Apr 29, 2024 05:39 AM GMT
Report

வெள்ளியங்கிரி மலை ஏற்றத்தின்போது மூச்சுதிணறல் ஏற்பட்டு பக்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

பக்தர் மரணம்

கோவையில், தென்கைலாயம் என அழைக்கப்படும் வெள்ளியங்கிரி கோவில் அமைந்து உள்ளது. 7 மலைகளை தாண்டி சிவலிங்கத்தை தரிசிக்க லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை புரிவது வழக்கம்.

velliangiri

கடந்த பிப்ரவரி மாதம் முதல் மே மாதம் வரை பக்தர்கள் மலை ஏற அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில், திருவள்ளூர் மீஞ்சூர் கிராமத்தை சேர்ந்த புண்ணியகோடி (46) என்பவருடன் அவர்களது நண்பர்கள் 10 பேர் அடிவாரத்தில் தரிசனம் முடித்து பூண்டி மலை ஏற தொடங்கியுள்ளார்.

சில்லென்ற கோயம்புத்தூருக்கு சென்றால் அங்கு கொட்டி கிடைக்கும் அழகிய இடங்களை கண்டிப்பாக காணுங்கள்!

சில்லென்ற கோயம்புத்தூருக்கு சென்றால் அங்கு கொட்டி கிடைக்கும் அழகிய இடங்களை கண்டிப்பாக காணுங்கள்!

அதிகரிக்கும் பலி எண்ணிக்கை

இதில் ஒன்றாவது மழை ஏறும் போது திடீரென புண்ணியகோடிக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டு மயக்கம் அடைந்துள்ளார். உடனே கீழே அழைத்து வந்து 108 ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.

வெள்ளியங்கிரி மலையேறிய பக்தர் திடீர் மரணம்; 3 மாதத்தில் 9 பேர் உயிரிழப்பு - பரபரப்பு! | Man Died Velliangiri Hills 9Th Casualty Kovai

அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்துள்ளார். இதனையடுத்து வழக்குப்பதிவு செய்த போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

முன்னதாக இந்தாண்டு மட்டும் வெள்ளிங்கிரி மலை ஏறிய பக்தர்கள் ஒன்பது பேர் உயிரிழந்துள்ளது குறிப்பிடத்தக்கது.