வெள்ளியங்கிரி மலைக்கு செல்வோர் கவனத்திற்கு! வனத்துறை கொடுத்த முக்கிய அட்வைஸ்!
வெள்ளியங்கிரி மலைக்கு செல்வோருக்கு வனத்துறை முக்கிய தகவலை வெளியிட்டுள்ளது.
வெள்ளியங்கிரி மலை
கோவை மாவட்டத்தில் உள்ள வெள்ளியங்கிரி மலையில் பக்தர்கள் மட்டுமல்லாது ட்ரக்கிங் செல்பவர்களும் மலையேறி அங்கு அருள்பாளிக்கும் சிவன் கோவில் சென்று வழிபடுவது வழக்கம். தென் கைலாயம் என அழைக்கப்படும் இந்த கோவிலுக்கு பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் வந்து சுவாமி தரிசனம் செய்து செல்வார்கள்.
இது கடல் மட்டத்தில் இருந்து 6 ஆயிரம் அடி உயரத்தில் உள்ள வெள்ளியங்கிரி மலைக்கு 5.5 கி.மீ மலைப்பாதையில் பயணிக்க வேண்டும். மலையேறும் பக்தர்கள் எண்ணிக்கை தினந்தோரும் அதிகரித்து வருகிறது. மொத்தமாக ஏழு மலைத்தொடர்கள் கொண்ட வெள்ளியங்கிரி மலையில் ஏழாவது மலையில் சிவலிங்கம் உள்ளது.
அங்கு தரிசனம் செய்யவே மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. அதுவும் சிவனுக்கு உகந்த நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகைபுரிவார்கள். இச்சுழலில், சித்ரா பவுர்ணமியையொட்டி ஏராளமான பக்தர்கள் வெள்ளியங்கிரி மலைக்கு வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
வனத்துறை அட்வைஸ்
இதை தொடர்ந்து, வெள்ளியங்கிரி மலைக்கு செல்லும் பக்தர்களை ட்ரோன் மூலம் கண்காணிக்க வனத்துறை சார்பில் திட்டமிடப்பட்டுள்ளது. அதே சமயம் கோடை வெயிலின் தாக்கத்தால் ஏற்படும் காட்டுத் தீயை கண்காணிக்கவும் ட்ரோன்களை பயன்படுத்த வனத்துறை முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
மேலும் கடந்த மாதங்களில் சென்று திரும்பியதில் 7 பக்தர்கள் உயிரிழந்து உள்ள நிலையில், இருதய நோய் சம்பந்தப்பட்டவர்கள், உயர் இரத்த அழுத்தம் உள்ளவர்கள், மூச்சுதிணறல் உள்ளவர்கள், உடல்பருமனாக உள்ளவர்கள், நீரிழிவு நோய் உள்ளவர்கள், வயதில் மூத்தவர்கள்,
உடல்நிலை சரியில்லாதவர்கள், கொரோனாவினால் பாதிக்கப்பட்டு தீவிர சிகிச்சையில் இருந்தவர்கள் என வெள்ளிங்கிரி மலை ஏறும் பக்தர்கள் அனைவரும் மருத்துவரை சந்தித்து முழு உடலை பரிசோதித்த பிறகு செல்ல வேண்டும் என்று வனத்துறை கோரிக்கை விடுத்துள்ளது.