பள்ளிப்படிப்பு கூட முடிக்கல.. ரூ.416 கோடிக்கு மெசேஜ் ஆப் உருவாக்கி அசத்திய இளைஞர்!
ரூ.416 கோடி மதிப்புள்ள மெசேஜ் ஆப்பை இளைஞர் ஒருவர் உருவாக்கியுள்ளார்.
மெசேஜ் ஆப்
அசாம், திப்ரூகார் பகுதியைச் சேர்ந்தவர் கிஷான்(26). இவர்Texts.com என்ற புதுமையான மெசேஜ் செயலியை உருவாக்கியுள்ளார். இது பல்வேறு மெசேஜ் செயலிகளை பராமரிக்கும் தளமாக செயல்படும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.
வாட்ஸ்-அப், இன்ஸ்டாகிராம், ட்விட்டர் (தற்போது X), டெலிகிராம் என அனைத்து பிரபல செயலிகளையும் ஒருங்கிணைத்து ஒரே இண்டர்ஃபேஸின் கீழ் கொண்டுவருகிறது.
ரூ.416 கோடி மதிப்பு
இந்த செயலி ஆட்டோமெட்டிக் நிறுவனத்தின் சிஇஓ மற்றும் நிறுவனர் மேட் முலன்வெக்கின் கவனத்தை ஈர்த்துள்ளது. தற்போது, இதனை அமெரிக்காவைச் சேர்ந்த ஆட்டோமெட்டிக் நிறுவனத்திடம் சுமார் 50 மில்லியன் அமெரிக்க டாலருக்கு (இந்திய மதிப்பில் ரூ.416 கோடி) விற்பனை செய்துள்ளார்.
முன்னதாக, கிஷான் 10ம் வகுப்பை நிறைவு செய்துள்ளார். கல்லூரிக்குச் செல்லவில்லை. அதற்குப் பதிலாக இணையம் மூலம் பல திறன்களை பெற்று அறிவை வளர்த்துக் கொண்டுள்ளார்.
அதிலும், அவர் பெரும்பாலும் இணையத்தில் இலவச ஆன்லைன் வகுப்புகளையே படித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.